fbpx
Connect with us

தொழில்நுட்பம்

புதிய ஐபோனை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் தீர்மானம்

Published

on

ஒவ்வொரு வருடமும் ஆப்பிள் நிறுவனம் புதுப்புது ஆப்பிள் சாதனங்களை வியக்கத்தகு அம்சங்களுடன் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இம்மாதம் புதிய ஐபோன்களையும் iphone 15, iphone 15 pro, ஆப்பிள் கைக்கடிகாரங்களையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நேரப்படி செப்டம்பர் 12ம் திகதி இரவு 10.30 மணியளவில் இந்நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உள்ளூர்

இலங்கை மக்களுக்கு கணினி அவசர செயற்பாட்டு பிரிவு எச்சரிக்கை!

Published

on

By

கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக அனுப்பப்படும் போலியான குறுஞ் செய்திகள் ஊடாக தவறான தகவல்கள் பரப்பப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இது குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு மக்களுக்கு அறிவித்துள்ளது.

தபால் மூலம் பார்சல் கிடைத்துள்ளதாகவும் முகவரி தெளிவின்மை காரணமாக அதனைத் திருப்பி அனுப்ப வேண்டியுள்ளதாகவும் எனவே, அதனைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்களின் இரகசிய தகவல்களை பெற்று பண மோசடி செய்ய வாய்ப்புள்ளதாகவும் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு மக்களுக்கு அறிவித்துள்ளது.

Continue Reading

இந்தியா

நிலவில் தடம் பதித்தது சந்திரயான்-3

Published

on

By

santhirayan 03

இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் தடம் பதித்தது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலன் அனுப்பியதில் தோல்வியை தழுவிய நிலையில், இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.

சந்திரயான் -2 தோல்விக்கு பிறகு, பல்வேறு மாற்றங்களுடன் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்து, எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14 ஆம் திகதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னா் நிலவின் சுற்றுப் பாதையில் விண்கலம் பயணித்தது. சந்திரயான் 3-இல் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டா் கலன் கடந்த 17 ஆம் திகதி விடுவிக்கப்பட்டது.

நிலவுக்கும் லேண்டர் கலனுக்கும் இடையேயான தூரத்தை பல்வேறு கட்டங்களாக படிப்படியாக இஸ்ரோ குறைத்தது. இறுதியில், குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ தொலைவும் கொண்ட சுற்றுப் பாதையில் லேண்டர் கொண்டுவரப்பட்டது.

பின்னர் நிலவின் தரையிலிருந்து 150 மீட்டா் உயரத்துக்கு லேண்டா் கொண்டுவரப்பட்டது. சில விநாடிகள் அந்த நிலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர், அதிலுள்ள சென்சாா்கள் மூலம் தரையிறங்க சரியான சமதள பரப்புடைய இடம் தோ்வு செய்யப்பட்டது.

லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும், மெதுவாக நிலவில் தரையிறக்கும் முயற்சியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

இந்த முயற்சி பலன் அளித்ததால், சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.

சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருவரையொருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றதால், புதிய இந்தியா உருவாகியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Advertisement

பிரபல்யமானவை