fbpx
Connect with us

விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் மலிங்க!

Published

on

Mumbai Indians

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷேன் பொண்ட் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக உள்ளார். அவருக்கு பதிலாகவே மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ பி எல் இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 139 போட்டிகளில் விளையாடிய மலிங்க 2021 இல் ஓய்வு பெறுவதற்கு முன்பு 170 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

உள்ளூர்

கிரிக்கெட் வீரர் சசித்ரவுக்கு விளக்கமறியல்!

Published

on

By

ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனநாயக்கவை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று வெள்ளிக்கிழமை (15) உத்தரவிட்டுள்ளார்.

சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கை

சந்தேக நபருக்கு பிணை வழங்கினால் சாட்சிகளுக்கு செல்வாக்கு செலுத்த முடியும் என சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2020 லங்கா பிரிமியர் லீக் போட்டியில் தம்மிக்க பிரசாத் மற்றும் இளம் வீரர் தரிந்து ரத்நாயக்கவை ஆட்ட நிர்ணயம் செய்ய தூண்ட முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Continue Reading

உள்ளூர்

ஆசிய கிண்ணம் – இலங்கை அணி அறிவிப்பு!

Published

on

By

2023 ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அணித்தலைவராக தசுன் சானக்கவும் , உப தலைவராக குசல் மெந்திஸும் பெயரிடப்பட்டுள்ளனர்.

முன்னதாக அணியில் இடம்பெற்றிருந்த வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் காயம் அடைந்ததன் காரணமாக இறுதி அணிக்கு தெரிவு செய்யப்படவில்லை என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பினுர பெர்னாண்டோ மற்றும் பிரமோத் மதுஷன் ஆகியோருக்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் ஒப்புதல் பெறப்பட உள்ளதாக இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுகவீனமுற்றுள்ள குசல் ஜனித் பெரேரா பூரண குணமடைந்த பின்னர் அணியில் இணைவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

இந்தியா

தங்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா!

Published

on

By

உலக தடகள செம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார்.

2 ஆவது வாய்ப்பில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வென்றுள்ளார் நீரஜ் சோப்ரா.

உலக தடகள செம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 2 ஆம் இடம் பிடித்தார்.

இந்திய வீரர் கிஷோர் ஜெனா 84.77 மீ. தூரம் ஈட்டியை வீசி, 5 ஆம் இடம் பிடித்துள்ளார்.

மற்றொரு இந்திய வீரர் டி.பி.மானு 83.72 மீட்டருடன் 6 ஆம் இடம் பிடித்தார்.

Advertisement

பிரபல்யமானவை