fbpx
Connect with us

ஆன்மீகம்

மார்கழி மாத குபேர அமாவாசை நாளில் இலட்சுமி கடாட்சம் பெருக செய்ய வேண்டிய பரிகாரம்!

Published

on

அமாவாசை என்பது இந்துக்களின் வழிபாட்டு முறையில் மிக முக்கியமான விரத நாளாகும். எந்த நாளை தவற விட்டாலும் அமாவாசை நாளை கண்டிப்பாக தவற விடாமல் இறை வழிபாட்டையும், முன்னோர் வழிபாட்டினையும் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசைக்கு ஒரு தனிச்சிறப்பு இருப்பது போது மார்கழி மாதத்தில் வரும் அமாவாசையும் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.

மார்கழி அமாவாசை மிகவும் சக்தி வாய்ந்த நாளாகும். இந்த நாளில் நாம் செய்யும் பரிகாரங்கள் நமக்கு பணவரவை அதிகரிக்க செய்யும்.

கட்டுக் கட்டாக பணம் சேரா விட்டாலும், எவ்வளவு செலவு வந்தாலும் அதை சமாளிக்கக் கூடிய அளவிற்கு வரவும் வந்து கொண்டே இருக்கும்.

பொதுவாக வியாழக்கிழமையில் வரும் அமாவாசைக்கு குபேர அமாவாசை என்ற பெயர்.

மார்கழி அமாவாசை 

இந்த ஆண்டிற்கான மார்கழி மாத  அமாவாசை  இன்றைய தினம் (11.014.2024)  அனுஷ்டிக்கப்படுகிறது.

 இந்த குபேர அமாவாசையில் சில குறிப்பிட்ட பரிகாரங்களை செய்தால் குபேர யோகம் என்பது அமையும்.

அதோடு பணத்திற்கு தட்டுப்பாடு, பஞ்சம் என்பது உங்களுக்கு எப்போதும் ஏற்படாது.

கடன் சுமையும் படிப்படியாக குறையும்.

குபேர அமாவாசை

வழக்கம் போல் வீட்டை சுத்தம் செய்து, பித்ரு தர்ப்பணம் கொடுத்த பிறகு வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள்.

மாலையில் குபேர வேளை என சொல்லப்படும் 06.30 முதல் 8 மணி வரையிலான நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வைத்து, 3 ஒரு ரூபாய் நாணயங்களை பூஜை அறையில் வைத்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

நிதி தொடர்பான உங்களின் குறைகள், பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதை சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள்.

பணத்தை ஈர்க்கும் பரிகாரம்

பிறகு அந்த 3 ஒரு ரூபாய் நாணயங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். முதல் ஒரு ரூபாயை கடுகு கொட்டி வைத்திருக்கும் டப்பாவில் போட்டு வையுங்கள்.

வழக்கமாக கடுகு வைத்திருக்கும் அஞ்சறை பெட்டி இல்லாமல், தனியாக ஒரு டப்பாவில் கடுகை கொட்டி, அதற்குள் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு வையுங்கள்.

கடுகிற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை உண்டு.

அதனாலேயே பழங்காலம் துவங்கி நம்முடைய வீடுகளில் கடுகு டப்பாவில் பணத்தை போட்டு வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது.

இப்படி செய்வதன் மூலம் பணம் சேர்கிறதோ இல்லையோ, பணத்திற்கு பஞ்சம் என்பது எப்போதும் ஏற்படாது.

அடுத்ததாக மற்றொரு ஒரு ரூபாய் நாணயத்தை, உங்கள் வீட்டில் உள்ள கல் உப்பு ஜாடியில் போட்டு வையுங்கள்.

கல் உப்பு இல்லா விட்டாலும் இந்த நாளில் சிறிதளவு கல் உப்பு வாங்கி ஒரு ஜாடியில் கொட்டி உங்களின் சமையல் அறையில் வையுங்கள்.

அந்த ஜாடிக்குள்ளாகவோ அல்லது ஜாடிக்கு அடியிலோ அந்த ஒரு ரூபாய் நாணயத்தை வையுங்கள்.

மூன்றாவதாக மற்றொரு ஒரு ரூபாய் நாணயத்தை உங்கள் வீட்டில் அரிசி கொட்டி வைத்திருக்கும் பாத்திரத்திற்குள் போட்டு வையுங்கள்.  

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஆன்மீகம்

இவ்வாண்டில் இராஜதந்திரமா செயற்படக்கூடிய இராசிக்காரங்க இவங்கதான்!

Published

on

By

 ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு இராசி அறிகுறிகளும் ஒவ்வொரு ஆளுமை பண்புகளை கொண்டிருக்கின்றன.

ஆளுமை பண்பின் அடிப்படையில், உங்களின் நடத்தைகள் மற்றும் குணநலன்கள் இருக்கும். சிலர் மிகவும் ராஜதந்திர அறிகுறிகளை பெற்றிருப்பார்கள்.

இந்த பண்பை பெற்றிருக்கும் நபர்கள், வாழ்க்கையில் சிறந்த உயரத்தை அடைவார்கள்.

2024 இல் முதல் இராஜதந்திரமாக நடந்து கொள்ளும் ராசியினர் பற்றி அறிந்துக்கொள்வோம்.

துலாம்

சமநிலை மற்றும் கவர்ச்சிக்கு பெயர் பெற்ற துலாம் இராசிக்காரர்கள் இராசியின் இராஜதந்திரிகள்.

2024 ஆம் ஆண்டில், ஒரு சூழ்நிலையின் இரு பக்கங்களையும் பார்க்கும் அவர்களின் உள்ளார்ந்த திறன் மற்றும் அவர்களின் தீவிர நீதி உணர்வு அவர்களை தனித்து நிற்கச் செய்கிறது.

பிரச்சனைகளை தீர்ப்பது அல்லது நல்லிணக்கத்தை வளர்ப்பது எதுவாக இருந்தாலும், துலாம் ராசிக்காரர்கள் இந்த ஆண்டு உங்களுக்கான ராஜதந்திரிகளாக இருப்பார்கள்.

அதனால், இவர்களிடம் சற்று கவனமாக நடந்துகொள்ளுங்கள்.

மீனம்

உணர்ச்சி ரீதியாக புத்திசாலி மற்றும் இரக்கமுள்ள, மீன ராசிக்காரர்கள் இராஜதந்திர பண்புகளுடன் இரக்கத்துடன் நடந்துகொள்வார்கள்.

2024 ஆம் ஆண்டில், அவர்களின் உள்ளுணர்வு இயல்பு அவர்களை ஆழமான மட்டத்தில் மற்றவர்களுடன் இணைக்க அனுமதிக்கிறது.

மேலும் பலதரப்பட்ட முன்னோக்குகளைப் புரிந்துகொள்வதில் அவர்களைத் திறமையாக ஆக்குகிறது.

மீன ராசியின் இராஜதந்திர திறமையை உங்களுக்கு சாதகமாகவும் பயன்படுத்தலாம்.

மிதுனம்

2024 ஆம் ஆண்டில் இராஜதந்திர சூழ்நிலைகளுக்கு பல்துறைத்திறனைக் கொண்டுவருகிறது.

அவர்களின் விரைவான புத்திசாலித்தனம் மற்றும் தங்கள் காலடியில் சிந்திக்கும் திறனுடன், மிதுன ராசிக்காரர்கள் ராஜதந்திர தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் சிறந்து விளங்குகிறார்கள்.

மிதுன ராசியின் வசீகரம் மற்றும் தகவமைப்புத் திறன் உங்கள் சொந்த இராஜதந்திரத் திறன்களை எவ்வாறு மேம்படுத்தும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

தனுசு

இவ்வாண்டில் , தனுசு ராசிக்காரர்கள் இராஜதந்திர முயற்சிகளுக்கு தங்கள் நம்பிக்கையான மற்றும் திறந்த மனதுடன் அணுகுமுறையைக் கொண்டு வருகிறார்கள்.

சாகசம் மற்றும் கற்றல் மீதான அவர்களின் காதல் ஒரு மாறும் மற்றும் உள்ளடக்கிய இராஜதந்திர பாணியை உறுதி செய்கிறது.

தனுசு ராசியின் விரிவான உலகக் கண்ணோட்டத்தை பார்த்து, நீங்களும் இராஜதந்திரமாக இருக்க முயற்சி செய்யலாம்.  

Continue Reading

ஆன்மீகம்

தனுசு செல்லும் புதன்; அதிர்ஷடத்தில் திகழவுள்ள மூன்று இராசிக்காரர்கள்!

Published

on

By

நவக்கிரகங்களில் பேச்சு, வணிகம், புத்திசாலித்தனம், பொருளாதாரம், படிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன்.

இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.

இந்த புதன் குறுகிய நாட்களில் இராசியை மாற்றினாலும், அதன் தாக்கம் அனைத்து  இராசிகளிலுமே காணப்படும்.

தற்போது புதன் விருச்சிக இராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில்  இன்றைய தினம்  (07.01.2024)  புதன் தனுசு ராசிக்குள் நுழைகிறார்.

தனுசு ராசிக்குள் புதன் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது.

குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடு, நிறைய இலாபமும் கிடைக்கப் போகிறது. 

மிதுனம்

மிதுன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார்.

இதனால் திருமணமான இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

ஆயினும, உங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளைப் புறக்கணிக்காதீர்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது.

திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள்.

சிலர் புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம்.

தனுசு

தனுசு ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார்.

இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும்.

உங்களின் வேலைகளை திட்டமிட்டபடியே முடிப்பீர்கள்.

பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

உங்கள் வாழ்க்கைத் துணை முன்னேறலாம்.

கூட்டு தொழில் செய்ய நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

முக்கியமாக வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார்.

இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.

பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.

சிலர் ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழலாம்.

மருத்துவம், ரியல் எஸ்டேட், ஹோட்டல் தொடர்பான வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

Continue Reading

ஆன்மீகம்

50 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் நவபஞ்ச இராஜயோகம்; அதிர்ஷ்ட மழையில் நனையவுள்ள இராசிக்காரர்கள்

Published

on

By

குரு, சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் 2024-ல் இரட்டை நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்குகின்றன.

இந்த இரட்டை நவபஞ்ச ராஜயோகமானது சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கவுள்ளது.

இதனால் இதன் தாக்கம் அனைத்து இராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் நல்ல நிதி நன்மைகளையும், தொழிலில் நல்ல முன்னேற்றங்களையும் காணவுள்ளார்கள்.

அதோடு வெற்றி மேல் வெற்றியைப் பெறவுள்ளார்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த இரட்டை நவபஞ்ச ராஜயோகமானது மங்களகரமானதாக இருக்கப் போகிறது.

முக்கியமாக அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிதி நிலையில் நல்ல முன்னற்றம் ஏற்படப் போகிறது.

சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

சிலர் ஜனவரி 14 ஆம் தேதிக்குள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சில நல்ல செய்திகளைப் பெறலாம்.

வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆசையைக் கொண்டிருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இரட்டை நவபஞ்ச ராஜயோகமானது நற்பலன்களை வாரி வழங்கும். முக்கியமாக வருமானத்தில் உயர்வு ஏற்படும்.

வேலை மற்றும் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

தொழில்நுட்பம், ஆசிரியர் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இக்காலகட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஏற்கனவே நீங்கள் முதலீடுகளை செய்திருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.

ஆனால் திருமணமானவர்கள் தங்கள் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இரட்டை நவபஞ்ச ராஜயோகமானது அற்புதமான பலன்களை வழங்கும்.

அதுவும் நீண்ட நாட்களாக நீதிமன்ற வழக்குகள் நடந்து கொண்டிருந்தால், இக்காலத்தில் அதில் வெற்றி கிடைக்கும்.

வேலை மற்றும் வியாபாரத்திலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும்.

பணிபுரிபவர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெறலாம். சிலர் விரும்பிய இடமாற்றத்தைப் பெற வாய்ப்புள்ளது.

புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வணிகர்களுக்கு நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். 

Continue Reading
Advertisement

பிரபல்யமானவை