இந்தியா
இந்திய சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கும் யாழ் யுவதி!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த வருணிகா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார். காக்கா முட்டை படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த விக்னேஷ், ரமேஷ் இருவரும் கதை நாயகர்களாக நடிக்கும் படம் புது வேதம்.
புது வேதம் ராசா விக்ரம் இயக்குகிறார். இந்த படத்தில் விக்னேஷ் ஜோடியாக நடிக்கிறார் வருணிகா.
உள்நாட்டு போரால் இடம்பெயர்வு
யாழ்பாணத்தை சேர்ந்த வருணிகா , உள்நாட்டு போர் நடந்தபோது அங்கிருந்து குடும்பத்துடன் சென்னை சென்று செட்டிலானார்.
நடிப்பு மீது ஆசை கொண்ட வருணிகா சினிமா ஆடிசன்களில் கலந்து கொண்டு சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.
இப்போது புதுவேதம் படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார்.
சென்னையில் உள்ள குப்பை மேடுகளில் வாழும் மக்களை பற்றிய கதை இது. இதில் அவர் அந்த பகுதியில் வாழும் ஏழைப் பெண்ணாக நடித்துள்ளார். படம் அடுத்த மாதம் வெளிவருகிறது.
இந்தியா
மனங்களை சம்பாதித்த மாமனிதன் கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்!
தென்னிந்திய பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந் கொவிட் தொற்று ஏற்பட்டதன் காரணமாக நேற்று (28.12.2023) அதிகாலை மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் காலமானார்.
இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் உடல் இன்று காலை சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
சந்தன பேழை அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் இறுதி ஊர்வலமானது ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், விஜயகாந்தின் உடலை தாங்கும் சந்தனப் பேழை தயாராகியிருக்கிறது.
மேலும், குறித்த சந்தன பேழையில் ‘புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
கணவனுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்கும் மனைவிகள்! காலம் காலமாக பின்பற்றப்படும் வழக்கம்; எங்கு தெரியுமா?
திருமணம் என்பது ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதே ஆகும். இதுவே பெரியவர்கள் கூறும் அறிவுரையும் ஆகும்.இந்நிலையில் முதல் மனைவி தங்கள் கணவர்களுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்கும் ஆச்சர்ய சம்பவம் கிராமம் ஒன்றில் கடைப்பிடிக்கபப்டு வருகின்றமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் மனைவி தனது கணவனுக்கு இரண்டாவதாக பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும் விநோதமான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
பழமையான பழக்க வழக்கங்கள்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில் உள்ள ராம்தேவ் கிராமத்து மக்கள் இன்னும் தங்களது பழமையான பழக்க வழக்கங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் இரண்டு திருமணங்கள் செய்து கொள்கின்றனர்.
அத்துடன் முதல் மனைவி தனது கணவனின் இரண்டாவது மனைவியை வரவேற்கிறார். திருமணத்துக்கு தயாராவது, மணப்பெண்ணை வரவேற்பது முதல் மணமக்களின் படுக்கையை தயாரிப்பது வரை அனைத்தையும் முதலில் திருமணம் செய்து வந்த பெண்ணே செய்கிறார்.
ஒரே ஆணை திருமணம் செய்துகொள்ளும் இந்த இரண்டு பெண்களும் ஒரே குடும்பத்தில் சகோதரிகளை போல வாழ்கின்றனர். அவர்களுக்குள் சண்டையே வருவதில்லை என்று கூறுகின்றனர்.
முதல் மனைவிக்கு குழந்தை பிறக்காது
கிராம வாசிகள். இப்படி வித்தியாசமான பழக்கத்திற்கு முக்கியமான காரணம் ஒன்றையும் அவர்கள் கூறுகிறார்கள். அதாவது இந்த கிராமத்தை பொறுத்தவரை முதலில் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு குழந்தை பிறக்காது என்பது ஐதீகம்.
அப்படியே குழந்தை பிறந்தாலும் அது பெண் குழந்தையாகத் தான் பிறக்குமாம். அதனால் ஒவ்வொரு ஆணும் இரண்டாவது திருமணம் செய்துகொள்வதாக தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இக்கிராம மக்களின் விநோத முறை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்குள்ள சில இளஞர்கள் இந்த பழக்கத்திற்கு நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி வருகின்றார்களாம்.
இந்தியா
கமல் மீது வழக்குத் தொடரப்பட்டு பிக் பாஸ் நிகழ்ச்சி இடைநிறுத்தப்படுமா!
பிரபல தென்னிந்திய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என பெண்கள் முறையிட்டதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து பிரதீப் ரெட் கார்ட் (Red card) வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டில் உள்ள மாயா பூர்ணிமா ஜோவிகா ஐஷு ஆகியோர் கூட்டாக சேர்ந்து பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என முத்திரை குத்தி பிரதீப்பை வெளியேற்றி விட்டனர் என விமர்சனம் எழுந்துள்ளது.
பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து கமல்ஹாசன் இவ்வாரம் வெளியேற்றப்பட்டமைக் குறித்து விளக்கமளிக்காவிட்டால் அவரது அரசியல் நிலைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
திறமையான ஜோவிகா
மேலும் பிக்பாஸ் வீட்டில் ஜோவிகா வனிதா போன்றல்லாமல் மிகவும் திறமையாக நன்முறையில் நடந்துக்கொண்டு வருகிறார் என இரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றிருந்தார்.
எனினும் தற்போது புல்லி கேங் என சொல்லப்படும் மாயாவுடன் இணைந்து நடந்துக் கொள்ளும் விதம் இரசிகர்கள் மத்தியில் பெரும் கடுப்பேற்றி உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பிரதீப்பை வெளியேற்றுவதற்கான கடந்த வார எபிசோட்டில் பெண் போட்டியாளர்கள் உரிமைக்குரல் எழுப்பியபோது ஜோவிகா முதலில் குரல் எழுப்பியதால் ஜோவிகா பிரதீப் வெளியேற்றத்திற்கு பிரதான காரணமாகியுள்ளார் என நெட்டிசன்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆவேசமாக குரல் எழுப்பிய வனிதா
மக்களைத் தூண்டி விடுவதற்காக பொய்யான காரணம் சொல்லி பிரதீப்பை வெளியேற்றியதாக விசித்ரா பேசுகிறார். என் மகள் ஜோவிகா பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசவே இல்லை. நான் வழக்கு தொடர்வேன்.
18 வயதான ஜோவிகா எதன் அடிப்படையில் பெண்களட பாதுகாப்பு என்று கூறி ரெட்கார்டு கொடுத்தீங்கன்னு கேட்டு கேஸ் போடுவாள் . இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கவில்லையாயின் நான் அவதூறு வழக்கு தொடர்வேன்.
கமல் சார் தான் பெண்கள் பாதுகாப்பு என பேசினார் என வனிதா ஆவேசமாகப் பேசியுள்ளார்.
மேலும் பிளான் பண்ணிதான் பிரதீப்பை வெளியேற்றியுள்ளனர் என சிலர் காணொளிகளையும் பரப்பி வருகின்றனர். இதனால் என் மகளுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.
கமல் சார் மீது வழக்கு
இவ்வாரம் இதுகுறித்து கமல் சார் இவ்வாரம் பேசவில்லையாயின் கமல் சார் மீது வழக்கு தொடர்வோம். தன் மகளின் எதிரடகாலம் குறித்தும் சிந்திக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார்.
இந்நிலையில் கமல்ஹாசன் இது குறித்து இவ்வாரம் கண்டிப்பாக பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நான் சட்டம் படிக்காவிட்டாலும் சட்டம் குறித்து எனக்கு எல்லாமே தெரியும் என வனிதா தெரிவித்துள்ளார்.
அதனால் சட்டப்படி வனிதாவுக்கு விளக்கம் அளிப்பார்களா இல்லை அவதூறு வழக்கைத் தொடர்வார்களா எனத் தெரியவில்லை . இவ்வாறான நிலையை கமல்ஹாசன் பிக் பாஸ் விஜய் டீவி கூட எதிர்ப்பார்த்திருக்கமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
-
உள்ளூர்1 year ago
கொழும்பில் இளம் குடும்பஸ்தர் படுகொலை; பதைபதைக்கும் சம்பவம்!
-
உள்ளூர்1 year ago
யாழ் பல்கலைக்கழக மாணவியொருவர் தூக்கில் தொங்கி உயிரிழப்பு
-
வாழ்க்கைமுறை1 year ago
நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றீர்களா?
-
ஆன்மீகம்1 year ago
நேருக்கு நேர் இருக்கும் புதனும், சனியும் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த 4 ராசிக்காரர்களுக்கும் யார்?
-
இந்தியா1 year ago
குறைவடைந்த தங்கத்தின் விலை; தங்கம் வாங்க சரியான நேரம் இது தான்!
-
உள்ளூர்1 year ago
யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி கைது!
-
உள்ளூர்1 year ago
இலங்கைக்கு வந்த நெதர்லாந்து பெண்ணிற்கு நேர்ந்த துயரம்!
-
உள்ளூர்1 year ago
கிரிக்கெட் வீரர் சசித்ரவுக்கு விளக்கமறியல்!