fbpx
Connect with us

உள்ளூர்

யாழ் போதனா வைத்தியசாலையில் கையை இழந்த சிறுமி; தாதி தொடர்பில் வெளியான தகவல்

Published

on

மருத்துவத் தவறினால் யாழ். போதனா வைத்தியசாலையில், 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சிறுமியின் கை போக காரணமான தாதி தொடர்பிலான தகவல்கள் சமூகவலைத்தளங்களில், வெளியாகியுள்ளது.

சிறுவர் வார்ட்டில் பணியாற்றி வரும் ஜனனி ரமேஸ் எனும் தாதியே சிறுமியின் இந்த அவலநிலைக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

தாதியால் மன உளைச்சலுக்கு ஆளாகும் குழந்தைகள் பெற்றோர்கள்
அதுமட்டுமல்லாது குறித்த தாதி மீது பல்வேறு குற்றசாட்டுக்கள் உள்ளபோது நிர்வாகம் அதனை கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரண்டு பிள்ளைகளுக்கு தாயான அந்த தாதியால் , சிறுவார்ட்டில் உள்ள பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளும் பல முறை மன உளைச்சலுக்கு உள்ளாகியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை சம்பந்தப்பட்ட தாதி தொடர்பில் வைத்தியசாலை எவ்வித தகவல்களையும் வெளியிடாத நிலையில் சமூக வலைத்தளங்களில் தாதியின் செயலுக்கு கண்டணங்கள் குவிந்து வருகின்றது.

காச்சலுக்கு சிகிற்சைக்கு சென்ற சிறுமி கையை இழந்து தவிக்கும் நிலையில் அந்த சிறுமி போல , வேறு எந்த சிறுவர்களும் இதுபோன்ற பாதிப்புக்களுக்கு இனியேனும் முகம்கொடுக்க கூடாது என வலியுறுத்தியுள்ள சமூக ஆர்வலர்கள், சம்பவத்திற்கு காரணமான தாதி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு மருந்தினை ஏற்றியதில் ஏற்பட்ட தவறு காரணமாக சிறுமி தனது கையை இழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர்

சித்திரத் தேர் வெள்ளோட்டம்!

Published

on

By

மட்டக்களப்பு குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம் 2024-02-24ம் திகதி சனிக்கிழமை மாசி மகத்தன்று மாலை 03-30 மணியளவில் இடம்பெற உள்ளது

அனைவரும் வருக… அருள்பெறுக…

-ஆலய பரிபாலானசபை

Continue Reading

உள்ளூர்

EPF – ETF மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!

Published

on

By

உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்களுக்கு பாதகம் ஏற்படுவதாக குற்றம்சாட்டி  தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஒக்டோபர் 30 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.

இது தொடர்பான மனுக்கள் எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த மனுக்களை விசாரணை செய்யாமல் நிராகரிப்பதற்கு அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைப்பதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனுக்களை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தனது அடிப்படை ஆட்சேபனையில் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் என்டன் மார்கஸ் உள்ளிட்ட 04 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Continue Reading

உள்ளூர்

மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும்!

Published

on

By

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று (23) யாழில் ஊடக சந்திப்பினை நடாத்தினர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருடன் ஒரு சந்திப்பில் ஈடுபட்டோம். அதில் இலங்கை தொடர்பான பிரச்சினைகளை தெரிவித்தோம்.

தமிழ் மக்களின் காணிகளை சுவிகரிப்பது, தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தொடர்பிலும் தெரிவித்தோம்.

அத்தோடு நாட்டில் மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும் என்றும் 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை வழங்கப்பட வேண்டும் என அவரிடம் தெரிவித்தோம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

Continue Reading
Advertisement

பிரபல்யமானவை