fbpx
Connect with us

உலகம்

இலங்கை தொடர்பிலான காணொளிகளை நீக்கிய சேனல் 4!

Published

on

இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்பிய இங்கிலாந்தின் சேனல் 4, வீடியோக்களை அகற்றியுள்ளதாக  தெரிவிக்கபப்டுகின்றது.

அதன் இணையதளம் உட்பட அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் இலங்கை தொடர்பிலான  சர்ச்சைக்குரிய வீடியோவை  சேனல் 4 நீக்கியுள்ளது.

நாமல் எழுப்பிய கேள்வி 

அதேவேளை ராஜபக்ஷேக்களுடன் செனல் 4 இற்கு 2009 ஆம் ஆண்டு யுத்த முடிவிலிருந்து வரலாற்று ரீதியிலான பகை இருப்பதாகத் தெரிவித்த நாமல் ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல் 4 வெளியிட்ட காணொளிகளில் நம்பகத்தன்மை இருக்குமானால் அதை எதற்காக அவர்கள் தமது இணையத்தளத்திலிருந்து நீக்க வேண்டுமென இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழித்ததற்காக ராஜபக்ஷேக்களைப் பழி வாங்குவதற்கான இன்னுமொரு முயற்சியாக இது இருக்கலாம், அல்லது சிலரின் அரசியல் நோக்கங்களைத் திருப்திப்படுத்துவதற்காக செனல் 4 புதிய வீடியோவை வெளியிட்டு இருக்கலாம் என நாமல்  தெரிவித்தார்.

 யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் எனது குடும்பத்துடனும் எனது தந்தை மற்றும் ராஜபக்ஷ என்ற பெயருடனும் செனல் 4 வரலாற்றுப் பகையைக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும்   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது, அது அரசியல் மயமாக்கப்படுவது சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்குத் தடையாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

உலகம்

கையடக்க தொலைபேசி கொள்வனவு செய்ய தயாராக இருப்பவர்களுக்கு முக்கிய தகவல்!

Published

on

By

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளை மாத்திரமே வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் மோசடிகளில் சிக்குவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிறுவனம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

விரும்பிய தொலைபேசி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த IMEI எண்ணைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

IMEI எண் என்பது International Mobile Equipment Identity என்பதனை குறிக்கின்றது.

இது அனைத்து கையடக்க தொலைபேசி சாதனங்களுக்கும் ஒதுக்கப்பட்ட தனித்துவமான 15 இலக்க எண்ணாகும்.

கையடக்க தொலைபேசி அட்டையில் காட்டப்படும் 15 இலக்க IMEI எண்ணை 1909 க்கு அனுப்புவதன் மூலம் IMEI எண்ணின் செல்லுபடியை சரிபார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது கையடக்க தொலைபேசி பதிவு செய்யப்பட்டதா இல்லையா என உடனடி பதில் செய்தி வரும் என குறிப்பிடப்படுகின்றது.

Continue Reading

உலகம்

பிரித்தானியாவில் உயரிய விருது பெறும் ஈழத்தமிழர்!

Published

on

By

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒருவருக்கு பிரித்தானியாவில் உயரிய விருது கிடைக்கவுள்ளதாக தகவலறியப்பட்டுள்ளது.

பொருட்களின் இருப்பிடத்தை கண்டரிவதற்கான புதிய மின்னணு பொறிமுறையொன்றை கண்டுபிடித்த இலங்கையரை பாராட்டி பிரித்தானியா உயரிய விருது வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட கலாநிதி சபேசன் சிதம்பர என்பரே இந்த சாதனையை படைத்துள்ளார்.

மருத்துவ பீடங்களில் இந்த தொழிநுட்பத்தை பயன்படுத்தி மருத்துவ உபகரணங்களை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த தொழிநுட்பத்தை உலகிலுள்ள அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பதே தமது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

Continue Reading

இந்தியா

மனங்களை சம்பாதித்த மாமனிதன் கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்!

Published

on

By

தென்னிந்திய பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்  கொவிட் தொற்று ஏற்பட்டதன் காரணமாக நேற்று (28.12.2023)  அதிகாலை மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் காலமானார்.

இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் உடல் இன்று காலை சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

சந்தன பேழை அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் இறுதி ஊர்வலமானது  ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில், விஜயகாந்தின் உடலை தாங்கும் சந்தனப் பேழை தயாராகியிருக்கிறது.

மேலும், குறித்த சந்தன பேழையில் ‘புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement

பிரபல்யமானவை