உள்ளூர்
சுவிஸ்வாழ் மருமகனிடம் ஏமாந்த யாழ்ப்பாண மாமியார்; பரிதாபமாக பறிபோன வீடு!
யாழ் நாவலர் வீதியில் வசித்துவரும் 64 வயதான இரு பெண் பிள்ளைகளின் தாயாரை ஏமாற்றி அவரது பெருமதியான யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டினை சுவிஸ்வாழ் மருமகன் அபரித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட தாயாரின் மூத்த மகள் 14 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் முடித்து சுவிஸ்லாந்து சென்று வாழ்ந்து வருகின்றார். மற்றைய மகள் திருமணம் முடிக்காத நிலையில், அரச நிறுவனம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராக உள்ளார்.
நீண்டநாட்களின் பின் ஒன்று சேர்ந்த குடும்பம்
மூத்த மகள் காதலித்து திருமணம் முடித்ததால் நீண்டகாலம் மகளுடன் தொடர்பில் இல்லாதிருந்த தாயார் கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்னரே மகள் யாழ்ப்பாணம் வந்த போது தொடர்பு ஏற்பட்டது.
அதன் பின்னர் தனது மகளின் பிள்ளையின் பூப்புனித நீராட்டு விழாவிற்காக சுவிஸிற்கு வருமாறு அழைத்த மருமகன் , மாமியாரின் பெறுமதிமிக்க யாழ்ப்பாண வீட்டை ஏமாற்றி எழுதி வாங்கியுள்ளார்.
சுவிஸ்லாந்திற்கு செல்வதற்கான விசாவைப் பெறுவதற்காக சொத்து மதிப்பினை சுவிஸ்துாதரகத்திற்கு காட்டுவதற்காக மாமியார் தனக்கு சொந்தமான வீட்டை பெறுமதியிட்டு குறித்த துாதரத்திற்கு விசா விண்ணப்பத்துடன் சமர்ப்பித்திருந்தார்.
இந்நிலையில் சுவிஸ் சென்ற மாமியாரை அங்கு நிரந்தரமாக தங்குவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாகவும், இளைய மகளையும் அங்கு அழைப்பதாகவும் மாமியாருக்கு மருமகன் உறுதியளித்துள்ளார்.
ஆசைவார்த்தைகூறி மோசடி
அதற்கு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளதாக கூறி மாமியாரை விசா முடிவடைவதற்குள் கொழும்பு கொண்டு வந்து ஆங்கிலத்தில் உறுதி ஒன்றைத் தயாரித்து மாமியாரின் யாழ் நாவலர் வீதியில் உள்ள 3 பரப்பு காணியுடன் கூடிய வீட்டினை தனக்கும் மனைவிக்குமாக சீதனமாக ஏமாற்றி பதிவு செய்துள்ளார்.
வீட்டை தனது தாயிடம் ஏமாற்றி எழுதி வாங்கிய விடயம் மனைவிக்கோ அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள மகளுக்கோ தெரியாது. காணியை எழுதிக் கொடுத்துவிட்டு மீண்டும் இரு நாட்களில் மருமகனுடன் மாமியார் சுவிஸ் சென்றுள்ளார்.
அங்கு தங்கியிருந்த பின் விசா முடிவடையும்போது இலங்கை செல்லுமாறும் அங்கு சென்ற பின்னரே நிரந்தர விசா எடுக்கலாம் என கூறி மாமியாரை, மருமகன் இலங்கைக்கு அனுப்பியுள்ளார்.
மாமியார் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்து ஓரிரு மாதங்களின் பின்னரே தனது சுவிஸ் மாப்பிளை தன்னை ஏமாற்றிய விடயம் சுவிஸ் மகள் ஊடாக தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியுள்ள தாயார் தனது மகளுக்கு முன்னால் தானும் யாழ்ப்பாணத்தில் உள்ள மற்றைய மகளும் தற்கொலை செய்யப் போவதாக கூறியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த சுவிஸ் மகள் அயலவர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் தாயாரிடம் ஆறுதல் வார்த்தைகள் கூறி வருவதாகவும் இன்னும் ஓரிரு மாதங்களில் குறித்த வீட்டை தனது கணவரிடம் கையெழுத்து வாங்கி மீண்டும் தருவதாகவும் கூறி தாயாரை சமாதானப்படுத்தியுள்ளாராம்.
இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.
உள்ளூர்
சித்திரத் தேர் வெள்ளோட்டம்!
மட்டக்களப்பு குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம் 2024-02-24ம் திகதி சனிக்கிழமை மாசி மகத்தன்று மாலை 03-30 மணியளவில் இடம்பெற உள்ளது
அனைவரும் வருக… அருள்பெறுக…
-ஆலய பரிபாலானசபை
உள்ளூர்
EPF – ETF மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!
உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்களுக்கு பாதகம் ஏற்படுவதாக குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஒக்டோபர் 30 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.
இது தொடர்பான மனுக்கள் எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த மனுக்களை விசாரணை செய்யாமல் நிராகரிப்பதற்கு அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனுக்களை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தனது அடிப்படை ஆட்சேபனையில் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் என்டன் மார்கஸ் உள்ளிட்ட 04 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உள்ளூர்
மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும்!
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று (23) யாழில் ஊடக சந்திப்பினை நடாத்தினர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருடன் ஒரு சந்திப்பில் ஈடுபட்டோம். அதில் இலங்கை தொடர்பான பிரச்சினைகளை தெரிவித்தோம்.
தமிழ் மக்களின் காணிகளை சுவிகரிப்பது, தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தொடர்பிலும் தெரிவித்தோம்.
அத்தோடு நாட்டில் மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும் என்றும் 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை வழங்கப்பட வேண்டும் என அவரிடம் தெரிவித்தோம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
-
இந்தியா1 year ago
இந்திய சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கும் யாழ் யுவதி!
-
உள்ளூர்1 year ago
கொழும்பில் இளம் குடும்பஸ்தர் படுகொலை; பதைபதைக்கும் சம்பவம்!
-
உள்ளூர்1 year ago
யாழ் பல்கலைக்கழக மாணவியொருவர் தூக்கில் தொங்கி உயிரிழப்பு
-
வாழ்க்கைமுறை1 year ago
நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றீர்களா?
-
இந்தியா1 year ago
குறைவடைந்த தங்கத்தின் விலை; தங்கம் வாங்க சரியான நேரம் இது தான்!
-
உள்ளூர்1 year ago
யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி கைது!
-
ஆன்மீகம்1 year ago
நேருக்கு நேர் இருக்கும் புதனும், சனியும் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த 4 ராசிக்காரர்களுக்கும் யார்?
-
உள்ளூர்1 year ago
இலங்கைக்கு வந்த நெதர்லாந்து பெண்ணிற்கு நேர்ந்த துயரம்!