உள்ளூர்

சுவிஸ்வாழ் மருமகனிடம் ஏமாந்த யாழ்ப்பாண மாமியார்; பரிதாபமாக பறிபோன வீடு!

Published

on

யாழ் நாவலர் வீதியில் வசித்துவரும் 64 வயதான இரு பெண் பிள்ளைகளின் தாயாரை ஏமாற்றி அவரது பெருமதியான யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டினை சுவிஸ்வாழ் மருமகன் அபரித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட தாயாரின் மூத்த மகள் 14 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் முடித்து சுவிஸ்லாந்து சென்று வாழ்ந்து வருகின்றார். மற்றைய மகள் திருமணம் முடிக்காத நிலையில், அரச நிறுவனம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராக உள்ளார்.

நீண்டநாட்களின் பின் ஒன்று சேர்ந்த குடும்பம்

மூத்த மகள் காதலித்து திருமணம் முடித்ததால் நீண்டகாலம் மகளுடன் தொடர்பில் இல்லாதிருந்த தாயார் கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்னரே மகள் யாழ்ப்பாணம் வந்த போது தொடர்பு ஏற்பட்டது.

அதன் பின்னர் தனது மகளின் பிள்ளையின் பூப்புனித நீராட்டு விழாவிற்காக சுவிஸிற்கு வருமாறு அழைத்த மருமகன் , மாமியாரின் பெறுமதிமிக்க யாழ்ப்பாண வீட்டை ஏமாற்றி எழுதி வாங்கியுள்ளார்.

சுவிஸ்லாந்திற்கு செல்வதற்கான விசாவைப் பெறுவதற்காக சொத்து மதிப்பினை சுவிஸ்துாதரகத்திற்கு காட்டுவதற்காக மாமியார் தனக்கு சொந்தமான வீட்டை பெறுமதியிட்டு குறித்த துாதரத்திற்கு விசா விண்ணப்பத்துடன் சமர்ப்பித்திருந்தார்.

இந்நிலையில் சுவிஸ் சென்ற மாமியாரை அங்கு நிரந்தரமாக தங்குவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாகவும், இளைய மகளையும் அங்கு அழைப்பதாகவும் மாமியாருக்கு மருமகன் உறுதியளித்துள்ளார்.

ஆசைவார்த்தைகூறி மோசடி

அதற்கு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளதாக கூறி மாமியாரை விசா முடிவடைவதற்குள் கொழும்பு கொண்டு வந்து ஆங்கிலத்தில் உறுதி ஒன்றைத் தயாரித்து மாமியாரின் யாழ் நாவலர் வீதியில் உள்ள 3 பரப்பு காணியுடன் கூடிய வீட்டினை தனக்கும் மனைவிக்குமாக சீதனமாக ஏமாற்றி பதிவு செய்துள்ளார்.

வீட்டை தனது தாயிடம் ஏமாற்றி எழுதி வாங்கிய விடயம் மனைவிக்கோ அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள மகளுக்கோ தெரியாது. காணியை எழுதிக் கொடுத்துவிட்டு மீண்டும் இரு நாட்களில் மருமகனுடன் மாமியார் சுவிஸ் சென்றுள்ளார்.

அங்கு தங்கியிருந்த பின் விசா முடிவடையும்போது இலங்கை செல்லுமாறும் அங்கு சென்ற பின்னரே நிரந்தர விசா எடுக்கலாம் என கூறி மாமியாரை, மருமகன் இலங்கைக்கு அனுப்பியுள்ளார்.

மாமியார் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்து ஓரிரு மாதங்களின் பின்னரே தனது சுவிஸ் மாப்பிளை தன்னை ஏமாற்றிய விடயம் சுவிஸ் மகள் ஊடாக தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியுள்ள தாயார் தனது மகளுக்கு முன்னால் தானும் யாழ்ப்பாணத்தில் உள்ள மற்றைய மகளும் தற்கொலை செய்யப் போவதாக கூறியுள்ளார்.

இதனால்  அச்சமடைந்த சுவிஸ் மகள் அயலவர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் தாயாரிடம் ஆறுதல் வார்த்தைகள் கூறி வருவதாகவும் இன்னும் ஓரிரு மாதங்களில் குறித்த வீட்டை தனது கணவரிடம் கையெழுத்து வாங்கி மீண்டும் தருவதாகவும் கூறி தாயாரை சமாதானப்படுத்தியுள்ளாராம்.      

இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version