அரசியல்
ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி!
பல துறைகளுக்கான அத்தியாவசிய சேவை பிரகடனத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
அதன்படி 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் அத்தியாவசிய சேவை பிரகடனத்தை நீடித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவை பிரகடனம்
1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளை வழங்குதல், விநியோகிப்பது அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் மருத்துவ நிலையங்களில் உள்ள நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு மற்றும் சிகிச்சை தொடர்பாக அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டுள்ளன.
அரசியல்
வெகுவிரைவில் விக்னேஸ்வரன் வைத்தியரைச் சந்திப்பது நல்லது! எம்.ஏ.சுமந்திரன்
வெகுவிரைவில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வைத்தியரைச் சந்திக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கட்சிகள் அனுப்பிய கடிதங்கள் எதுவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சென்றடையவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், இந்தியப் பிரதமரை நாங்கள் நேரில் சந்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தங்கள் கருத்து என்ன?’ – என்று அந்த நேர்காணலில் எழுப்பப்பட்ட கேள்விக்குச் சுமந்திரன் எம்.பி. பதிலளிக்கும் போதே இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அந்தக் கடிதங்கள் இந்தியப் பிரதமரிடம் சென்றடைந்துள்ளன. விக்னேஸ்வரன் வெகுவிரைவில் வைத்தியர் ஒருவரைச் சந்திக்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கின்றேன்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எங்களைச் சந்தித்தபோது இந்த விடயங்கள் (கடிதங்கள்) பிரதம மந்திரியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன என்று தெளிவாகவே சொல்லியிருந்தார்.
அதற்கு முன்னர் கடிதங்களை எடுத்துச் சென்ற இந்திய உயர்ஸ்தானிகர், அந்தக் கடிதங்களை இந்தியப் பிரதமரிடம் கையளித்தவுடனேயே புதுடில்லியிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு எடுத்து கடிதங்களைப் பிரதமரிடம் கையளித்துவிட்டேன் என்று அறிவித்திருந்தார். எனவே, எல்லாக் கடிதங்களுடம் இந்தியப் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லே ஆகியோர் அதனை எம்மிடம் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
ஆகவே, அவர்கள் அது தொடர்பில் எங்களுக்குப் பொய் சொல்ல வேண்டிய தேவையும் இல்லை; பொய் சொல்லியிருப்பார்கள் என்று நான் நினைக்கவும் இல்லை. விக்னேஸ்வரனுக்கு மறதி வியாதி ஏற்பட்டிருக்கலாம். அது வேறு பிரச்சினை.
இந்தியப் பிரதமரைச் சந்திப்பது தொடர்பில் விக்னேஸ்வரன் மின்னஞ்சலில் (இப்போது) அனுப்பிய கடிதம் எனக்குக் கிடைக்கவில்லை. நான் கட்சித் தலைவர் இல்லைதானே. கட்சித் தலைவர்களுக்குத்தான் அவர் கடிதம் அனுப்பியுள்ளார் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முக்கியமான விடயங்கள் தொடர்பில் என்னுடன் கலந்துரையாடுவார். ஆனால், விக்னேஸ்வரனின் கடிதத்தை அவர் முக்கியமான விடயமாகக் கருதவில்லையோ தெரியவில்லை, அந்தக் கடிதம் தொடர்பில் என்னுடன் சம்பந்தன் எதுவும் பேசவில்லை.
இந்தியாவின் முக்கிய வகிபாகத்தை நன்றாக அறிந்த தலைவர்தான் சம்பந்தன். அதற்கேற்ற மாதிரி அவரின் செயற்பாடுகள் இருக்கும்.” – என்றார்.
உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தொடர்பில் விக்னேஸ்வரன் எம்.பி. தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து குறித்தும் சுமந்திரன் எம்.பியிடம் கேள்வி கேட்ட போது,
“சட்டமா அதிபருக்கும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல் சம்பந்தமாகவே விக்னேஸ்வரன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன் அந்த உரையாடல் தொடர்பில் எவரும் எந்தக் கருத்துக்களையும் சொல்ல முடியாது. ஆகவே, விக்னேஸ்வரன் கற்பனையில் சொல்லுகின்ற விடயங்களுக்கு நான் பதிலளிக்க முடியாது.” – என்றார்.
அரசியல்
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை!
யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட வளாகத்தில் இன்றையதினம் (01-08-2023) புத்தர் சிலை ஒன்றை வைத்து, பௌத்த கொடிகள் என்பன கட்டப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றதாக அறிய முடிகிறது.
பேருந்து கவிழ்ந்து விபத்து – 18 பேர் காயம்!
தமிழர் தாயக பகுதிகளில் நீண்டகாலமாக புத்தர் சிலையை வைப்பது, பின்னர் அங்கு அடாத்தாக காணிகளை பிடித்து விகாரைகளை அமைப்பது போன்ற செயற்பாடுகள் இடம்பெற்று வருவது குறிப்பட்டத்தக்க ஒரு விடயம்.
இந்த நிலையில், போயா தினமான இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த புத்தர்சிலை அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அறிய முடிகிறது.
இப்படி, சிலைகளை கொண்டுவந்து வைப்பதுவும் எடுத்துச் செல்வதுமாக செய்து, பின்னர் ஒரேயடியாக சிலையை வைத்துவிட்டு விகாரை அமைக்கக்கூடிய சூழல் இருப்பதாக பல தரப்பினரும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் எம்மிடம் இருந்து பறிபோகக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த புத்தர் சிலையை பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து வழிபட பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கியதா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.
-
இந்தியா1 year ago
இந்திய சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கும் யாழ் யுவதி!
-
உள்ளூர்1 year ago
கொழும்பில் இளம் குடும்பஸ்தர் படுகொலை; பதைபதைக்கும் சம்பவம்!
-
ஆன்மீகம்1 year ago
நேருக்கு நேர் இருக்கும் புதனும், சனியும் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த 4 ராசிக்காரர்களுக்கும் யார்?
-
வாழ்க்கைமுறை1 year ago
நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றீர்களா?
-
உள்ளூர்1 year ago
யாழ் பல்கலைக்கழக மாணவியொருவர் தூக்கில் தொங்கி உயிரிழப்பு
-
இந்தியா1 year ago
குறைவடைந்த தங்கத்தின் விலை; தங்கம் வாங்க சரியான நேரம் இது தான்!
-
ஆன்மீகம்1 year ago
1113 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ள அரிய சேர்க்கை ; ஜோதிடம் கூறுவது என்ன?
-
உள்ளூர்1 year ago
யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி கைது!