உள்ளூர்
அடுக்குமாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த யாழ் யுவதி; காதலனின் அதிர்ச்சி வாக்குமூலம்..!
கல்கிஸ்ஸையில் உள்ள விடுதியொன்றின் அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து தமிழ் யுவதியொருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காதலன் கூறும் சில கருத்துக்கள் முரண்பாடானதாக இருந்தாலும், போதிய ஆதாரங்கள் இல்லாததால், இந்த மரணம் தற்கொலையா? கொலையா? என்பது இன்னும் முடிவெடுப்பதில் சிரமம் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவத்தில் பிரித்தானிய வாழ் இலங்கைப் பெண்ணான சின்னையா இலங்கேஸ்வரன் ரொமினா (27) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 9ஆம் திகதி அதிகாலை 2.40 மணியளவில், குறித்த யுவதி கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
உயிரிழந்த இளம் பெண் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட நிலையில் தற்போது குடும்பத்தினருடன் பிரித்தானியாவில் வசிக்கிறார். அவர் இலங்கையில் தங்கியிருந்தது, குடும்பத்தினருக்கு தெரியாது என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மலேசியாவில் ஒரு மாநாடு, ஆராய்ச்சி திட்டத்துக்காக சில மாதங்கள் தங்கியிருக்க வேண்டுமென பெற்றோரிடம் பொய் கூறிவிட்டு, கொழும்பு வந்து தனது முகநூல் காதலனுடன் தங்கியிருந்ததாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இளம் பெண் கொழும்பில் உயிரிழந்து விட்டார் என்ற செய்தியை குடும்பத்தினர் முதலில் நம்பவில்லையென தகவல் வெளியாகியுள்ளது.
ரொமினா, உயர்கல்வி பயின்று வந்தார். முகநூல் ஊடாக வௌள்வத்தையை சேர்ந்த குஷாந்தன் என்ற 29 வயதான இளைஞனுடன் காதல் உறவு ஏற்பட்டதாக தற்போது தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சட்டக்கல்லூரி மாணவரான அந்த இளைஞனும், ரொமினாவும் கடந்த 6 மாதங்களாக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். காதலனுடன் நேரத்தை செலவிட விரும்பிய ரொமினா கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு வந்திருந்தார்.
ரொமினா தமிழ் கத்தோலிக்கர். காதலன் சைவர். காதலன் கத்தோலிக்க மதத்துக்கு மாறி, ஞானஸ்நானம் பெற வேண்டும் என ரொமினா வற்புறுத்தியதாகவும், சைவ மதத்தை சேர்ந்த காதலன் சம்மதிக்காததால், இருவருக்கும் இடையே ஆரம்பம் முதலே பிரச்னைகள் இருந்து வந்தன.
அந்த ஜோடி 3 வாரங்களுக்கு முன்பு இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரொமினா மொத்தத் தொகையை ஸ்டெர்லிங் பவுண்ஸ் ஆக செலுத்தினார்.
தனது காதலனுடன் மூன்று வாரங்கள் வாழ்ந்த அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை 10ஆம் திகதி பிரித்தானியாவுக்கு செல்ல தயாராக இருந்தார். அதற்கு முதல் நாள் முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார்.
காதலியின் படுக்கையில் பல இரத்தக் கறைகள் காணப்பட்டதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பில் காதலனிடம் விசாரித்த போது, உயிரிழந்த காதலியின் காலில் சிறிய காயம் இருந்ததாக தெரிவித்தார்.
காதலன் கல்கிஸ்ஸை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யுவதி உயிரிழப்பதற்கு முதல் நாளும் மதத்தின் அடிப்படையில் வாக்குவாதம் செய்ததாக தெரிவித்தார்.
கத்தோலிக்க மதத்திற்கு மாறுமாறு காதலி வற்புறுத்திய போதும் சைவ மதத்தை விட்டு விலக விரும்பவில்லை என கூறியுள்ளார்.
இரவு இருவருக்கும் இடையே மதம் தொடர்பாக சிறு வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், 6 பியர் கான் குடித்துவிட்டு தூங்கிவிட்டதாகவும், பின்னர் எழுந்து பார்த்தபோது காதலியை காணவில்லையென்றும், தேடிப்பார்த்தபோது, அடுக்குமாடி குடியிரப்பின் கீழே அவரது உடல் காணப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
காதலன் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர்
சித்திரத் தேர் வெள்ளோட்டம்!
மட்டக்களப்பு குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம் 2024-02-24ம் திகதி சனிக்கிழமை மாசி மகத்தன்று மாலை 03-30 மணியளவில் இடம்பெற உள்ளது
அனைவரும் வருக… அருள்பெறுக…
-ஆலய பரிபாலானசபை
உள்ளூர்
EPF – ETF மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!
உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்களுக்கு பாதகம் ஏற்படுவதாக குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஒக்டோபர் 30 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.
இது தொடர்பான மனுக்கள் எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த மனுக்களை விசாரணை செய்யாமல் நிராகரிப்பதற்கு அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனுக்களை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தனது அடிப்படை ஆட்சேபனையில் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் என்டன் மார்கஸ் உள்ளிட்ட 04 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உள்ளூர்
மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும்!
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று (23) யாழில் ஊடக சந்திப்பினை நடாத்தினர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருடன் ஒரு சந்திப்பில் ஈடுபட்டோம். அதில் இலங்கை தொடர்பான பிரச்சினைகளை தெரிவித்தோம்.
தமிழ் மக்களின் காணிகளை சுவிகரிப்பது, தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தொடர்பிலும் தெரிவித்தோம்.
அத்தோடு நாட்டில் மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும் என்றும் 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை வழங்கப்பட வேண்டும் என அவரிடம் தெரிவித்தோம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
-
இந்தியா1 year ago
இந்திய சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கும் யாழ் யுவதி!
-
உள்ளூர்1 year ago
கொழும்பில் இளம் குடும்பஸ்தர் படுகொலை; பதைபதைக்கும் சம்பவம்!
-
உள்ளூர்1 year ago
யாழ் பல்கலைக்கழக மாணவியொருவர் தூக்கில் தொங்கி உயிரிழப்பு
-
வாழ்க்கைமுறை1 year ago
நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றீர்களா?
-
இந்தியா1 year ago
குறைவடைந்த தங்கத்தின் விலை; தங்கம் வாங்க சரியான நேரம் இது தான்!
-
உள்ளூர்1 year ago
யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி கைது!
-
ஆன்மீகம்1 year ago
நேருக்கு நேர் இருக்கும் புதனும், சனியும் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த 4 ராசிக்காரர்களுக்கும் யார்?
-
உள்ளூர்1 year ago
இலங்கைக்கு வந்த நெதர்லாந்து பெண்ணிற்கு நேர்ந்த துயரம்!