விளையாட்டு
மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் மலிங்க!
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூஸிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷேன் பொண்ட் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக உள்ளார். அவருக்கு பதிலாகவே மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ பி எல் இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 139 போட்டிகளில் விளையாடிய மலிங்க 2021 இல் ஓய்வு பெறுவதற்கு முன்பு 170 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.