உள்ளூர்
பாம்பு கடிக்கு இலக்காகி ஒன்றரை வயது குழந்தை பலி!
பாம்பு கடிக்கு இலக்காகி ஒன்றரை வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் கடந்த 15 ஆம் திகதி நள்ளிரவு ஒரு வயதும் 7 மாதம் நிரம்பிய தனுஜன் ஜெஸ்மின் எனும் குழந்தை படுத்துறங்கிய நிலையில் பாம்பு கடிக்கிலக்காகியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த குழந்தை உடனடியாக உறவினர்களால் தருமபுரம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி வைத்தியசாலையினரால் குழந்தையை கடித்த பாம்பினை கொண்டு வருமாறு கூறியதை அடுத்து உறவினர்கள் அந்த பாம்பினை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தொடர்ந்து அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு, பொரள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்த பொழுது அன்றைய தினமே மூன்று மணி அளவில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.
உள்ளூர்
சித்திரத் தேர் வெள்ளோட்டம்!
மட்டக்களப்பு குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம் 2024-02-24ம் திகதி சனிக்கிழமை மாசி மகத்தன்று மாலை 03-30 மணியளவில் இடம்பெற உள்ளது
அனைவரும் வருக… அருள்பெறுக…
-ஆலய பரிபாலானசபை
உள்ளூர்
EPF – ETF மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!
உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்களுக்கு பாதகம் ஏற்படுவதாக குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஒக்டோபர் 30 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.
இது தொடர்பான மனுக்கள் எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த மனுக்களை விசாரணை செய்யாமல் நிராகரிப்பதற்கு அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனுக்களை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தனது அடிப்படை ஆட்சேபனையில் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் என்டன் மார்கஸ் உள்ளிட்ட 04 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உள்ளூர்
மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும்!
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று (23) யாழில் ஊடக சந்திப்பினை நடாத்தினர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருடன் ஒரு சந்திப்பில் ஈடுபட்டோம். அதில் இலங்கை தொடர்பான பிரச்சினைகளை தெரிவித்தோம்.
தமிழ் மக்களின் காணிகளை சுவிகரிப்பது, தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தொடர்பிலும் தெரிவித்தோம்.
அத்தோடு நாட்டில் மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும் என்றும் 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை வழங்கப்பட வேண்டும் என அவரிடம் தெரிவித்தோம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
-
இந்தியா1 year ago
இந்திய சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கும் யாழ் யுவதி!
-
உள்ளூர்1 year ago
கொழும்பில் இளம் குடும்பஸ்தர் படுகொலை; பதைபதைக்கும் சம்பவம்!
-
ஆன்மீகம்1 year ago
நேருக்கு நேர் இருக்கும் புதனும், சனியும் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த 4 ராசிக்காரர்களுக்கும் யார்?
-
வாழ்க்கைமுறை1 year ago
நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றீர்களா?
-
உள்ளூர்1 year ago
யாழ் பல்கலைக்கழக மாணவியொருவர் தூக்கில் தொங்கி உயிரிழப்பு
-
இந்தியா1 year ago
குறைவடைந்த தங்கத்தின் விலை; தங்கம் வாங்க சரியான நேரம் இது தான்!
-
ஆன்மீகம்1 year ago
1113 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ள அரிய சேர்க்கை ; ஜோதிடம் கூறுவது என்ன?
-
உள்ளூர்1 year ago
யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி கைது!