fbpx
Connect with us

அமெரிக்கா

10 பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொண்ட இளைஞன்!

Published

on

இந்த திருமண விழாவை கடந்த ஜூலை 31ம் திகதியன்று லஸ்டின் கடற்கரையில் கொண்டாடினார்.

இது தொடர்பான காணொளியை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள இமானுவேல், “இன்று நான் 10 பெண்களை மணந்தேன்.. அனைவரும் என் மனைவிகள்” என்ற தலைப்பில் காணொளியைப் பகிர்ந்துள்ளார்.

9 வினாடிகள் கொண்ட இந்த காணொளியில் ஒன்பது மணப்பெண்கள் தங்கள் மாப்பிள்ளையை சுற்றி வருவது இடம்பெற்றுள்ளது.

அந்த பெண்கள் கவர்ச்சியாக, குட்டையான, வெள்ளை ஆடைகளை அணிந்துள்ளனர். கையில் பூங்கொத்து வைத்து உள்ளனர். ஒரு மணமகள் லஸ்டினின் மடியில் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

லஸ்டின் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். மேலும் பெண்களுக்கு மசாஜ் செய்பவர் ஆவார். அவர் வெளியிட்டு உள்ள திருமண காணொளிக்கு 5,81,000-க்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளன.

அமெரிக்கா

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

Published

on

By

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதன்படி உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.68 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89.81 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.11 அமெரிக்க டொலராக நிலவுகிறது. 

Continue Reading

அமெரிக்கா

அமெரிக்க குடியுரிமை தொடர்பில் பசில் எடுத்துள்ள முடிவு!

Published

on

By

தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட தயாராக இல்லை என முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்பும் தான் இதே நிலையில் தான் இருந்ததாகவும், இப்போதும் அதே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

கட்சி வேட்பாளர்

பசில் ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு இலங்கையின் அரசியலில் நேரடியாக பங்குப்பற்றுவார் என பொதுஜன பெரமுன கட்சியினர் மத்தியில் பேசப்பட்டு வந்தநிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யார் போட்டியிடுவது என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

எனினும், கட்சியாக வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என்ற கருத்து கட்சிக்குள் வலுவாக வெளிப்பட்டு வருவதாகவும், மற்றபடி வேட்பாளர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் பசில் மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Advertisement

பிரபல்யமானவை