fbpx
Connect with us

உலகம்

காஸாவில் இலங்கையர் மீது துப்பாக்கிச்சூடு; 8000 இலங்கையர்களின் நிலை என்ன?

Published

on

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் உக்கிரமாகிவரும் நிலையில் காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மற்றுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் 

இஸ்ரேலில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்கின்றனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

அவர்களில் பெரும்பாலானோர் டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் ஹைஃபா நகரங்களை மையமாக கொண்டு வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில்  அவர் மேலும் கூறுகையில்,

“தென் பிராந்தியத்தில் இருந்த இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் ஊழியர். வயிற்றிலும் கையிலும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை. மற்றுமொரு இலங்கை இளைஞரைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றாலும் அவர் தொடர்பில் அறிய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இலங்கையர் தொடர்புகொள்ள தொலைபேசி எண் 

 இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் தூதரகத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் 0094 – 716640560 என்ற இலக்கத்திற்கு WhatsApp ஊடாக தகவல்களை அனுப்ப முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி இணை முகாமையாளர் (பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு) காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

மேலும் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர் தொடர்பில் தகவல் கிடைக்காவிட்டால் 1989 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அவர்களைப் பற்றிய தகவல்களைப் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நடந்து வரும் போரில் இரு தரப்பிலும் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இரு தரப்புக்கும் இடையிலான மோதல்கள் மேலும் மோசமடைந்து வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகம்

கையடக்க தொலைபேசி கொள்வனவு செய்ய தயாராக இருப்பவர்களுக்கு முக்கிய தகவல்!

Published

on

By

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளை மாத்திரமே வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் மோசடிகளில் சிக்குவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிறுவனம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

விரும்பிய தொலைபேசி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த IMEI எண்ணைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

IMEI எண் என்பது International Mobile Equipment Identity என்பதனை குறிக்கின்றது.

இது அனைத்து கையடக்க தொலைபேசி சாதனங்களுக்கும் ஒதுக்கப்பட்ட தனித்துவமான 15 இலக்க எண்ணாகும்.

கையடக்க தொலைபேசி அட்டையில் காட்டப்படும் 15 இலக்க IMEI எண்ணை 1909 க்கு அனுப்புவதன் மூலம் IMEI எண்ணின் செல்லுபடியை சரிபார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது கையடக்க தொலைபேசி பதிவு செய்யப்பட்டதா இல்லையா என உடனடி பதில் செய்தி வரும் என குறிப்பிடப்படுகின்றது.

Continue Reading

உலகம்

பிரித்தானியாவில் உயரிய விருது பெறும் ஈழத்தமிழர்!

Published

on

By

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒருவருக்கு பிரித்தானியாவில் உயரிய விருது கிடைக்கவுள்ளதாக தகவலறியப்பட்டுள்ளது.

பொருட்களின் இருப்பிடத்தை கண்டரிவதற்கான புதிய மின்னணு பொறிமுறையொன்றை கண்டுபிடித்த இலங்கையரை பாராட்டி பிரித்தானியா உயரிய விருது வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட கலாநிதி சபேசன் சிதம்பர என்பரே இந்த சாதனையை படைத்துள்ளார்.

மருத்துவ பீடங்களில் இந்த தொழிநுட்பத்தை பயன்படுத்தி மருத்துவ உபகரணங்களை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த தொழிநுட்பத்தை உலகிலுள்ள அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பதே தமது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

Continue Reading

இந்தியா

மனங்களை சம்பாதித்த மாமனிதன் கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்!

Published

on

By

தென்னிந்திய பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்  கொவிட் தொற்று ஏற்பட்டதன் காரணமாக நேற்று (28.12.2023)  அதிகாலை மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் காலமானார்.

இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் உடல் இன்று காலை சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

சந்தன பேழை அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் இறுதி ஊர்வலமானது  ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில், விஜயகாந்தின் உடலை தாங்கும் சந்தனப் பேழை தயாராகியிருக்கிறது.

மேலும், குறித்த சந்தன பேழையில் ‘புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement

பிரபல்யமானவை