உள்ளூர்
தெற்கில் காணாமல்போன 14 வயது சிறுமி வடக்கில் காதலனுடன் மீட்பு!
தெற்கில் காணாமல்போனதாக கூறப்பட்ட 14 வயதான சிறுமி வாவௌனியாவில் காதலனுடன் மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா – நாகர், இலுப்பைக்குளம் பகுதியிலுள்ள வீடோன்றிலிருந்து நேற்று (10) மதியம் மீட்கப்பட்டமையுடன் உடனிருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்டிமார், தும்பவத்தை தோட்டத்தை சேர்ந்த 14 வயதுடைய தியாகராஜ் சரணியா எனும் சிறுமியை காணவில்லை என கடந்த (03) ஆம் திகதி அன்று குறித்த சிறுமியின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் சமூக வலைத்தளத்திலும் சிறுமியின் புகைப்படத்தினை பிரசுரித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் அச்சிறுமியை வவுனியா – நாகர், இலுப்பைக்குளம் பகுதியில் இளைஞருடன் தங்கிருந்ததை அவதானித்த அயலவர்கள் அப்பகுதி கிராம சேவையாளருக்கு தகவல்வழங்கியுள்ளனர்.
தொலைபேசி காதலனை தேடிவந்த சிறுமி
அதன் அடிப்படையில் கிராம சேவையாளருடன் பொதுமக்கள், பொலிஸார், சிவில் அமைப்புக்கள், பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் இணைந்து சிறுமியை மீட்டு வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தானும் அவ் இளைஞனும் தொலைபேசியூடாக காதலித்ததாகவும் அவருடன் வாழ ஆசைப்பட்டு தான் இங்கே வந்ததாகவும் தெரிவித்தார்.
ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் சிறுமி பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியின் காதலானான 18 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர்
சித்திரத் தேர் வெள்ளோட்டம்!
மட்டக்களப்பு குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம் 2024-02-24ம் திகதி சனிக்கிழமை மாசி மகத்தன்று மாலை 03-30 மணியளவில் இடம்பெற உள்ளது
அனைவரும் வருக… அருள்பெறுக…
-ஆலய பரிபாலானசபை
உள்ளூர்
EPF – ETF மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!
உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்களுக்கு பாதகம் ஏற்படுவதாக குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஒக்டோபர் 30 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.
இது தொடர்பான மனுக்கள் எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த மனுக்களை விசாரணை செய்யாமல் நிராகரிப்பதற்கு அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனுக்களை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தனது அடிப்படை ஆட்சேபனையில் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் என்டன் மார்கஸ் உள்ளிட்ட 04 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உள்ளூர்
மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும்!
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று (23) யாழில் ஊடக சந்திப்பினை நடாத்தினர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருடன் ஒரு சந்திப்பில் ஈடுபட்டோம். அதில் இலங்கை தொடர்பான பிரச்சினைகளை தெரிவித்தோம்.
தமிழ் மக்களின் காணிகளை சுவிகரிப்பது, தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தொடர்பிலும் தெரிவித்தோம்.
அத்தோடு நாட்டில் மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும் என்றும் 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை வழங்கப்பட வேண்டும் என அவரிடம் தெரிவித்தோம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
-
உள்ளூர்1 year ago
கொழும்பில் இளம் குடும்பஸ்தர் படுகொலை; பதைபதைக்கும் சம்பவம்!
-
இந்தியா1 year ago
இந்திய சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கும் யாழ் யுவதி!
-
ஆன்மீகம்1 year ago
நேருக்கு நேர் இருக்கும் புதனும், சனியும் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த 4 ராசிக்காரர்களுக்கும் யார்?
-
உள்ளூர்12 months ago
யாழில் கோரவிபத்து; அரச உத்தியோகஸ்தர் பலி!
-
வாழ்க்கைமுறை1 year ago
நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றீர்களா?
-
ஆன்மீகம்1 year ago
1113 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ள அரிய சேர்க்கை ; ஜோதிடம் கூறுவது என்ன?
-
உள்ளூர்1 year ago
யாழ் பல்கலைக்கழக மாணவியொருவர் தூக்கில் தொங்கி உயிரிழப்பு
-
உள்ளூர்12 months ago
முல்லைத்தீவில் வாகன விபத்து – இளைஞன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!