Uncategorized
காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

மதவாச்சியில் காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் மதவாச்சியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 வயதுடைய குறித்த நபர் வயலுக்குச் சென்ற போதே யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து சடலத்தை மீட்ட பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.


Uncategorized
க.பொ.த உயர்தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்!


நாட்டில் சீரற்ற காலநிலையால் தொடரும் அனர்த்தங்களினால் போக்குவரத்து இடையூறுகளை சந்திக்கும் உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் ஹாலி-எல ஏழாவது மைலுக்கு அருகில் பாரிய மண் மேடு சரிந்து வீதியின் குறுக்கே சரிந்து வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பண்டாரவளையில் இருந்து பதுளை நோக்கி பயணிக்க சிரமப்படும் பரீட்சார்த்திகள் பண்டாரவளை மத்திய மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளையில் இருந்து பண்டாரவளைக்கு செல்வதற்கு சிரமப்படும் பரீட்சார்த்திகள் பதுளை மத்திய கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள வீதியின் பகுதி துப்புரவு செய்யப்படும் வரை மாற்று வீதிகளான பண்டாரவளை – எட்டம்பிட்டிய வீதி மற்றும் தெமோதர – ஸ்பிரிங்வேலி வீதியை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளிடம் கோரப்பட்டுள்ளனர்.
Uncategorized
மனைவியால் தாக்கப்பட்டு கணவன் பலி!


மஹியங்கனை பிரதேசத்தில் மனைவியின் கத்திகுத்துக்கு இலக்காகி ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மஹியங்கனை கபுருகஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி கத்தியால் குத்தியதில் கணவன் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இவர்களுக்கிடையே தொடர்ந்து தகராறுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்னர் அவர் தனது பிள்ளைகளுக்கு விஷம் கொடுக்க முயற்சித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் நேற்றிரவு குடிபோதையில் வந்து மனைவியை தாக்கிவிட்டு, பிள்ளைகளுக்கும் விஷம் கொடுக்க முயற்சித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதன்போது மனைவி மன்னா கத்தியால் காலில் அடித்ததில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குறித்த நபர் முன்னொரு சந்தர்ப்பத்தில் தனது மனைவியைத் தாக்கிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரின் மனைவி பொலிஸில் சரணடைந்துள்ளதுடன், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Uncategorized
நோர்வேயில் பரிதாபமாக உயிரிழந்த யாழ் யுவதி; மரணம் குறித்து வெளியான தகவல்!


நோர்வேயின் எல்வெரும் (Elverum) பகுதியில் இளம் தமிழ் யுவதியொருவரின் சடலம் காருக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி உயிரிழந்த யுவதியின் பெற்றோர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள்
கடந்த 2 ஆம் திகதி நோர்வேயின் எல்வெரும் (Elverum) என்னும் பகுதியில் முன்னாள் காதலனால் , பல் மருத்துவரான குறித்த யுவதி கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக நோர்வே பொலிஸார் கூறியுள்ளனர்.
அத்துடன் சந்தேக நபரான இளைஞரும் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காருக்குள்ளிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் ,அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்ததாக நோர்வே தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றம் சாட்டப்பட்ட ஆண் (32) படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவித்துள்ள பொலிஸார் , இருவருக்கும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேவெளை கொலை சந்தேக நபரான இளைஞர் தொடர்பில் யுவதி, பொலிசில் முறையிட்டதை தொடர்ந்து, அவரை தொடர்பு கொள்ள இளைஞருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் நோர்வே பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் யுவதியின் உயிரிழப்பு அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் துயரத்தினை ஏற்படுத்தியுள்ளது.






-
உள்ளூர்1 year ago
யாழில் கோரவிபத்து; அரச உத்தியோகஸ்தர் பலி!
-
ஆன்மீகம்2 years ago
1113 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ள அரிய சேர்க்கை ; ஜோதிடம் கூறுவது என்ன?
-
உள்ளூர்1 year ago
முல்லைத்தீவில் வாகன விபத்து – இளைஞன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
-
ஆன்மீகம்1 year ago
இவ்வாண்டில் இராஜதந்திரமா செயற்படக்கூடிய இராசிக்காரங்க இவங்கதான்!
-
உள்ளூர்1 year ago
கொழும்பில் பரபரப்பை ஏர்படுத்திய தீ விபத்து; ஏராளமான சொத்துக்கள் நாசம்!
-
உள்ளூர்2 years ago
கொழும்பில் இளம் குடும்பஸ்தர் படுகொலை; பதைபதைக்கும் சம்பவம்!
-
ஆன்மீகம்2 years ago
நேருக்கு நேர் இருக்கும் புதனும், சனியும் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த 4 ராசிக்காரர்களுக்கும் யார்?
-
வாழ்க்கைமுறை2 years ago
நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றீர்களா?