Uncategorized
சுற்றுலா விடுதியொன்றில் புதையல் தோண்ட முயன்ற 9 பேர் அதிரடி கைது!
கற்பிட்டி தேதாவாடிய பிரதான வீதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த 9 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் குறித்த சுற்றுலா விடுதியின் உரிமையாளர் உட்பட அங்கு பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மண்வெட்டி, கோடரி உள்ளிட்ட பொருட்களும், பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும் இதன்போது பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சம்பவத்தில் தும்மலசூரிய மற்றும் கற்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.