உள்ளூர்
யாழில் கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த பாக்குடன் இரண்டு இளைஞர்கள் கைது!
யாழில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் முற்பகல் (20-08-2023) ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டை பகுதியில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 1,500 மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் 21 கிராம் 450 மில்லிகிராம் கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
சந்தேக நபர்கள் இரண்டு பேரும் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.