உள்ளூர்

குருந்தூர் மலைக்கு படையெடுக்கும் தென்னிலங்கை மக்கள்;பரபரப்பில் குருந்தூர்!

Published

on

குருந்தூர் மலையில் இன்றைய தினம் (18) வெள்ளிக்கிழமை பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்நிலையில் தென்பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் வருகை தந்து குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரையிலே வழிபாடுகளில், ஈடுபட்டு வருகின்றனர்.

பொலிசார், அதிரடிப்படையினர் குவிப்பு

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் இன்றையதினம் பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்நிலையில் மூன்று பேருந்துகள் மற்றும் இரண்டு ஹன்ரர்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிசார், அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளுக்காக கொண்டு வரப்பட்டிருக்கின்றார்கள்.

இதேவேளையிலே தமிழ் மக்கள் பொங்கல் நிகழ்வுக்காக இன்னும் சற்று நேரத்திலே குறித்த பகுதிக்கு வருகை தர இருக்கின்றார்கள். இந் நிலையில் தற்போது பௌத்த விகாரையில் வழிபாடுகளில் பௌத்த மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

புராதன சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பிரதேச மக்கள் தங்களது மத ரீதியான பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அத்துடன் ஒருவரது மத வழிபாடுகளுக்கு மற்றைய தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பதற்காக ஒருவரது மதவழிபாடுகளை தடுக்க தடை கட்டளை வழங்க முடியாது என பொலிஸாரின் தடையுத்தரவு கோரிக்கையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version