உள்ளூர்

முல்லைத்தீவில் குவிந்த மதவாதிகள்; மக்கள் மத்தியில் ஏற்பட்ட சந்தேகம்!

Published

on

முல்லைத்தீவு மாவட்டத்துக்குப் பௌத்த – சிங்கள கடும்போக்குவாதிகள் படையெடுத்துள்ளதுடன் அவர்கள் மாவட்டத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களைச் சந்தித்துள்ளதுடன் குருந்தூர்மலை விகாரைக்கும் சென்றுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்துக்குப் பயணம் மேற்கொண்ட சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவால், மாவட்ட செயலகத்தில் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளதுடன் கொக்குளாய் பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ள சிங்கள மக்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார்.

சரத் வீரசேகரவும் பயணம்

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, வட்டுவாகலிலுள்ள கோத்தாபய கடற்படைத்தளத்தில் தங்கி கொக்கிளாயிலுள்ள சம்போதி விகாரைக்குப் பயணம் மேற்கொண்டு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநராக இருந்த அநுராதா யஹம்பத் குருந்தூர் மலைக்குச் சென்று அங்கு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.

திடீரென சிங்கள – பௌத்த கடும்போக்குவாதிகள் முல்லைத்தீவு மாவட்டத்துக்குப் படையெடுத்துள்ளமை அங்குள்ள தமிழ் மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version