உள்ளூர்
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி தொடர்பில் வெடித்தது புதிய சர்ச்சை!
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழின் பயன்பாட்டை நலிவாக்கி மாற்று மொழிகளை முதன்மைப்படுத்த நினைக்கும் தமிழ் முகவர்கள் யாவர்? அவர்கள் யாருக்காத இதனைச் செய்கிறார்கள்? இந்தத் தமிழ் முகவர்கள் கடந்த மூதவைக் கூட்டம் (Senate meeting), பேரவைக் கூட்டம் (Council meeting) நடைபெறும் போது அதில் கலந்து கொண்டு தமிழில் பேசக்கூடாது என்று கட்டளை இட்டதாக அறிய முடிகின்றது.
அதே வேளை, சிங்கள மொழி விரிவுரையாளர் ஒருவர் தமிழில் பேச முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். அப்படியிருக்க குறித்த சில பீடங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியில் பேசுவதை ஆட்சேபித்துள்ளார்கள். இவர்கள் புத்திஜீவிகளா? பேரினவாத அரசியல்வாதிகளின் முகவர்களா ? என்று தமிழ் மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தத் தமிழ் முகவர்களின் தாய்மொழி தமிழ் என்பது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். இப்படியான தமிழ் முகவர்களால்தான் நமது தமிழர்களின் நிலை இவ்வாறு பாதிப்படைத்துள்ளது.
தமிழுக்கும், தமிழருக்கும் சமத்துவம் கிடைக்க வேண்டும் என்று பலர் தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்ததை இந்த முகவர்கள் ஏன் அறியாமல் இருக்கிறார்கள்.
இலங்கை அரசியல் யாப்பின்படி தமிழும் சிங்களமும் அரச கரும மொழியாகவும், தேசிய மொழிகளாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்ட தாய் மொழியை கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மட்டுப்படுத்த நினைக்கும் பேரினவாதத்திற்குத் துணை போகும் மோதாவிகள் யார்? இவர்களுக்கு என்ன தேவைப்படுகிறது.
இவர்களது பின்னணி என்ன? அடிப்படைவாத ஆளும் கட்சியின் எடுபிடிகளா ? என்றெல்லாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இவர்கள் மேலும் முகவர்களாகச் செயற்பட்டு தமிழுக்கும்.
தமிழர்க்கும் அநீதி இழைத்தால் இவர்களது முகத்திரைகளைக் கிழித்தெறிய வேண்டிய நிலை ஊடகத்துறைக்கும், உணர்வுள்ள தமிழர்க்கும் ஏற்படும் என்பதை எச்சரிக்கையாகக் கூறி வைக்க விரும்புகின்றோம்.
இவர்களுக்குத் தமிழில் பேசுவது விருப்பம் இல்லை என்றால் தென்பகுதிப் பல்கலைக்கழகங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதே பொருத்தமாக அமையும். தமிழருக்கு உதவிகள் செய்ய முடியாவிட்டால் பறவாயில்லை, உபத்திரத்தையாவது செய்யாதிருக்கட்டும் என கிழக்கு கல்விச் சமூகம் கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.