உள்ளூர்
வேலைநிறுத்தம் செய்யும் மின் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!
அத்தியாவசிய சேவையான மின்சார விநியோகத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வேலைநிறுத்தம் செய்யும் ஊழியர்களின் சேவையை இடைநிறுத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 03, 04, 05 ஆம் திகதிகளில் மின்சார ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பணம் செலுத்தும் ஜன்னல்கள் மூடப்பட்டமை மற்றும் பொதுச் சேவைகள் வழங்கும் அலுவலகங்கள் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடுகளைப் பெற்றுள்ளதாக அமைச்சர் மின்சார சபைத் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
எனவே மின்சார சபை நிர்வாகம் விடுமுறையை இரத்து செய்த போதும் பணிக்கு சமூகமளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தொடர்பிலும் மின்சார சபை தலைவரிடம் தகவல் கோரப்பட்டுள்ளது.