உள்ளூர்

முல்லைத்தீவில் போலி மின்சார சபை ஊழியர்களால் பதற்றம் : ஏமாற்றப்பட்ட மக்கள்!

Published

on

முல்லைத்தீவு உடுப்புக்குளம் தூண்டாய் கிராமத்தில் மின்சார சபையின் மின் இணைப்பை துண்டிப்பவர்கள் என தங்களை அறிமுகம் செய்த நபர்கள் பல மக்களின் வீடுகளுக்கு சென்று மின்சாரத்தினை துண்டிக்கப்போவதாக தெரிவித்து ஒருதொகை பணத்தினை அபகரித்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த கிராமத்திற்கு கடந்த 27ஆம் திகதி சென்ற இருவர் மின்சார கட்டணம் செலுத்தாத மக்களின் வீடுகளுக்கு சென்று மின்சாரத்தினை துண்டிக்கப்போவதாக கூறியுள்ளார்கள்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த பெண்கள் மின்சாரத்தினை துண்டிக்க வேண்டாம் என சொல்லியுள்ளார்கள்.

இல்லாவிடின் கட்டும் பணத்தில் ஒருதொகுதியினை தாருங்கள் நாங்கள் செல்கின்றோம் என கேட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் பல குடும்பங்கள் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பணத்தினை கொடுத்துள்ளார்கள் இதையடுத்து, 28ஆம் திகதி மின்சார பட்டியல் கொடுக்கும் நபர் வீடுகளுக்கு வந்து மின்சார பட்டியலை கொடுத்துள்ளார்.

மின்சாரம் துண்டிப்பு

இதன் போது சம்பவத்தினை மக்கள் தெரியப்படுத்தியுள்ளார்கள்.

இதையடுத்து தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக உணர்ந்த மக்கள் முல்லைத்தீவில் உள்ள மின்சார சபையிடம் வந்து முறையிட்டுள்ளார்கள்.

அவர்கள் ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பெயர் விபரங்கள், மின்கட்டண விபரங்கள் எல்லாம் எவ்வாறு அவர்களுக்கு தெரியும் என்ற கேள்வியினை எழுப்பியுள்ளார்கள்.

மின்சார சபை நடவடிக்கை எடுக்கமுடியாத நிலையில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் மின்சார பட்டியல் வழங்குபவர் ஒருவரை கேட்டபோது தற்போது மின்சாரம் துண்டிப்பு என்பது நிறுத்தப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சை காரணமாக மின்சார நிலுவையினை செலுத்தாவர்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தூண்டாய் கிராமத்தில் சுமார் பத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version