உள்ளூர்
பால்மாவின் விலையில் மாற்றம்!
நாடளாவிய ரீதியில் லங்கா சதொச நிறுவனம் பால் மாவின் விலையை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைக் குறைப்பு நேற்று(01.11.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விலைக் குறைப்பு
இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 948 ரூபாவாகும்.
நாடளாவிய ரீதியில் உள்ள லங்கா சதொச கிளைகளில் இதனைப் பெற்றுக் கொள்ள முடியும்.