உள்ளூர்

முல்லைத்தீவில் 14 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்!

Published

on

முல்லைத்தீவில் 14 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும் சிறுமியே 25 ஆம் திகதியன்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய அச் சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ அறிக்கை

மருத்துவ அறிக்கையின் பிரகாரம் சிறுமியை இரு வேறு சந்தர்ப்பங்களில் இருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முதல் சந்தேக நபரை கைது செய்து 27 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது அந்த நபர் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து சிறுமியுடன் தகாத உறவினை மேற்கொண்ட குற்றத்துக்காக மற்றுமொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சிறுமியுடன் மூன்று பேர் வரை தகாத உறவில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சிறுமி தொடர்ந்து மாவட்டம் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version