உலகம்
சீனாவின் முன்னாள் பிரதமர் காலமானார்!
சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் காலமானார். இவருக்கு வயது 68. நேற்று இரவு (26) இவர் திடீரென லீ கெகியாங் மரணமடைந்ததாக கூறப்படுகின்றது.
பொருளாதார வல்லுனரான லீ கெகியாங் சீனாவின் முன்னேற்றத்திற்கு அரும்பாடு பட்டவர். அத்துடன் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான இவர், கட்சியில் செல்வாக்கு நிறைந்தவராக பார்க்கப்பட்டார்.
எனினும் சீன அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் பதவியேற்ற பின்னர் இவரை ஓரங்கட்ட துவங்கினார்.
இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற லீ கெகியாங், ஷாங்காய் நகரில் வசித்து வந்தார்.