உள்ளூர்
வீதியோரம் நடந்து சென்றவர்களுக்கு ஏற்பட்ட விபத்து!
சப்ரகமுவ மாகாணத்திற்குட்பட்ட எம்பிலிப்பிட்டிய – மொரகெட்டிய பிரதான வீதியில் இலுக்கெட்டிய பிரதேசத்தில் நேற்று (25.10.2023) இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரும் எம்பிலிப்பிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஆண் ஒருவரும் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்குள்ளானோர் பலியானோர்
உயிரிழந்தவர்கள் 58 மற்றும் 71 வயதுடையவர்கள் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
வீதியோரம் நடந்து சென்ற ஆண் ஒருவர் மற்றும் இரண்டு பெண்களை விபத்திற்குள்ளாக்கிய மோட்டார் வாகனம் தப்பிச் சென்றுள்ளது.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற மோட்டார் வாகனத்தின் சாரதியை தேடி பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.