உள்ளூர்
ஏழு நாடுகளின் பிரஜைகள் இலங்கை வருவதற்கு வழங்கப்பட்ட இலவச விசா அனுமதி!
ஏழு நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இலவச விசா மூலம் இலங்கை வருவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இத்திட்டத்திற்காக எதிர்வரும் 2024 மார்ச் 31ஆம் திகதி வரை இந்தச் சலுகை வழங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது X தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு விசா இன்றி இந்நாட்டிற்கு பிரவேசிக்க அனுமதிக்கப்படுகிறது.