உள்ளூர்
வடமாகாணத்திற்கு புதிய பேருந்துகள்!
வடமாகாணத்திற்கு போதிய பேருந்துகளை வழங்குவதோடு, போதிய நடத்துனர்கள் மற்றும் சாரதிகளை நியமிக்குமாறு, விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அங்கஜன் இராமநாதன் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து சேவையை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக, வடமாகாணத்தில் அமைந்துள்ள டிப்போக்களுக்கு போதிய பேருந்துகளை வழங்குவதோடு, போதிய நடத்துனர்கள் மற்றும் சாரதிகளை நியமிக்குமாறு, போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் கோரிக்கை கடிதம் ஒன்றை சமர்ப்பித்திருந்தேன்.
அதன்பிரகாரம் அமைச்சின் செயலாளரினால், மேற்குறித்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.