ஆன்மீகம்

மட்/குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு சக்தி விழா- 2023

Published

on

மட்/குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு சக்தி விழா திருச்சடங்கு 20-10-2023 அன்று ஆரம்பமாகி 28-10-2023 அன்று திருச்சடங்கு நிறைவு பெறும் அடியார்கள் அனைவரும் வருகை தந்து அன்னையருள் பெறுக என ஆலய நிர்வாக சபையினர் அன்புடன் அழைக்கின்றனர்.

உற்சவகால நிகழ்வுகள்

20.10.2023 – வெள்ளிக்கிழமை

காலை 108 சங்காபிஷேகம்,

பிற்பகல் 4.30 மணியளவில் கங்கா பரமேஸ்வரி திருக்குட நீர் எடுத்தல்,

மாலை 6.00 மணியளவில் அம்பாளின் திருக்கதவு திறத்தல், விநாயகர் வழிபாடு, ஊர்காவல். கும்பத்தில் அம்பாளை எழுந்தருளப்பண்ணல், விஷேட பூஜை, ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வலம் வருதல்,பிரசாதம் வழங்கல்.

21.10.2023 – சனிக்கிழமை

மாலை 3.00 மணியளவில் பூஜை ஆரம்பமாகி குருமண்வெளி இரு வட்டாரமும் ஊர்காவல் பண்ண அம்மன் புறப்படுதல்.

22.10.2023 – ஞாயிற்றுக்கிழமை

மதியப்பூஜை 1.00 மணியளவில் ஆரம்பமாகும்.

இரவுப்பூஜை 9.00 மணியளவில் நடைபெற்று ஶ்ரீநாகதம்பிரான், ஶ்ரீமகாவிஷ்ணு, ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயங்களுக்கு அம்பாள் சென்று திரும்புதல், பிரசாதம் வழங்குதல்.

23.10.2023 – திங்கட்கிழமை

மதியப்பூஜை 1.00 மணியளவில் ஆரம்பமாகும்.

இரவுப்பூஜை 9.00 மணியளவில் இடம்பெற்று பிரசாதம் வழங்குதல்.

24.10.2023 – செவ்வாய்க்கிழமை

காலை 7.00 மணியளவில் பூஜை இடம்பெற்று மடிப்பிச்சை எடுப்பதற்காக 11ம் வட்டாரம் சுற்றுதல்

இரவுப்பூஜை 9.00 மணியளவில் இடம்பெற்று பிரசாதம் வழங்குதல்.

25.10.2023 – புதன்கிழமை

காலை 7.00 மணியளவில் பூஜை இடம்பெற்று மடிப்பிச்சை எடுப்பதற்காக 12ம் வட்டாரம் சுற்றுதல்

இரவுப்பூஜை 9.00 மணியளவில் இடம்பெற்று பிரசாதம் வழங்குதல்.

26.10.2023 – வியாழக்கிழமை

மதியப்பூஜை 1.00 மணியளவில் ஆரம்பமாகும்.

இரவுப்பூஜை 9.00 மணியளவில் இடம்பெற்று பிரசாதம் வழங்குதல்.

27.10.2023 – வெள்ளிக்கிழமை

முற்பகல் 10.00 அளவில் நெல் குற்றல் (வட்டுக்குற்றல்), இரவு 9.00 மணியளவில் விநாயகபெருமானை எழுந்தருளப்பண்ணல்

வெள்ளிக்கிழமை (28.10.2023) நள்ளிரவுக்குப்பின் பேச்சியம்மனுக்கு மது வார்த்தல், கன்னிமார் எழுந்தருளப்பண்ணல், ஊர்மக்களுக்கு எந்தவித கண்டங்களும் ஏற்படக்கூடாது என்று கன்னிமார்களிடம் திருப்தி வாக்கெடுத்தல், பொங்கல் படைத்தல், பள்ளியப்பூஜை, பலி கொடுத்து தேவதைகளைத் திருப்திப்படுத்தல் கும்பம் சொபித்து தீர்த்தமாடல் அருள்வாழி பாடுதலுடன் இனிதே நிறைவுபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version