உள்ளூர்
சட்டத்தரணியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்த கைதி!
கலகெதர நீதவான் நீதிமன்ற அறையின் கதவு திறக்கப்பட்டதும் அதிலிருந்து கைதி ஒருவர் தப்பியயதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகியிருந்த சட்டத்தரணி ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அறையில் இருந்த பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் அந்த நபரை மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழுத்து நெரிக்கப்பட்ட சட்டத்தரணி
கழுத்து நெரிக்கப்பட்ட சட்டத்தரணி மருத்துவ சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் கண்டி களுவான பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முப்பது வயதுடைய நபர் 760 மில்லிகிராம் கஞ்சா வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கலகெதர பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கலகெதர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.