உள்ளூர்

யாழில் பகுதியில் இளம் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

Published

on

வீட்டில் குப்பை கொழுத்திய போது எதிர்பாராத வகையில் ஆடையில் தீ பற்றி எரிந்த தீயினால் காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 7ம் திகதி பிற்பகல் 5 மணியளவில் வீட்டில் இருந்து குப்பையினை மண்ணெண்ணெய் ஊற்றி கொழுத்திய போது அவரது ஆடையில் தீப்பற்றியுள்ளது.

இதையடுத்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று(12) பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான சுகந்தன் தயாபரி (வயது-37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணம் தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version