உள்ளூர்

யாழில் நள்ளிரவில் அரங்கேறிய சம்பவத்தால் அச்சத்தில் குடும்பம்!

Published

on

யாழ்.தென்மராட்சி மீசாலை மேற்கு பகுதியிலுள்ள வீட்டின்மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் பெறுமதியான பொருகளும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கதவை உடைத்து நுழைந்த  வன்முறைக்குழு

கதவை உடைத்து உள்ளே நுழைந்த இனந் தெரியாத குழுவினர் பொருட்களுக்கு தீயிட்டுள்ளனர். இதன்போது மோட்டார் சைக்கிள் தொலைக்காட்சி பெட்டி மற்றும் வீட்டு தளபாடங்கள் தீக்கிரியாக்கப்பட்டுள்ளன.

வீட்டில் தாய் மகள் போரப்பிள்ளைகள் என ஐவர் இருந்துள்ளனர். இதன்போது வீட்டில் இருந்தவர்களுக்கு எதுவித சேதங்களும் ஏற்படவில்லை.

இந்நிலையில்  வீட்டில்  தீ பரவுவதை கண்ணுற்ற அயலர்கள் அவர்களை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில் நள்ளிரவில் இடம்பெற்ற இச்சம்பவம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version