வாழ்க்கைமுறை

காதலில் ஒரு நட்பு வேண்டுமா?

Published

on

பொதுவாக காதலித்து திருமணமானாலும் சரி, திருமணம் செய்து காதலித்தாலும் சரி சில தம்பதிகளுக்குள் நட்பு என்பது இருக்காது.

காரணம் நட்பில் எல்லாவற்றையும் தாண்டிய ஒரு நம்பிக்கை, உறுதி, சந்தேகமின்மை, உந்து சக்தி என பல இருக்கும். சில நட்புகளில் வேண்டுமானால் ஒருவர் பொறுப்பற்றவராக இருந்து மற்றவர் அவருக்காக மூழ்கி போகும் நிலை ஏற்படலாம்.

ஆனால், பல நட்புகள் பரஸ்பரம் இருவரும் சேர்ந்து கற்பது, சேர்ந்தே வளர்ச்சி அடைவது என அவ்வளவு சிறப்பாக இருக்கும். அதற்கு காரணம் அவர்களுக்குள் இருக்கும் பொறுப்புணர்வும், புரிதலும் தான்.

பலரும் ஏன் ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக மட்டுமே இருக்க முடியாதா என்ற கேள்வியை கூட முன்வைக்கிறார்கள்.

அது அந்தந்த தனிப்பட்ட நண்பர்களின் விருப்பம். ஆனால், முன் சொன்னது போல் ஒருவர் எப்போதும் எதுவுமே செய்யாமல் பொறுப்பற்றவராக திரிந்துக் கொண்டு மற்றொருவர் கடினப்பட்டு அவரை திருத்தி, பாதுகாத்து ஒன்று சேர்வது என்பது அப்பட்டமான காதல் சுரண்டல்தான்.

அது தவறு. எனவே, உங்களின் அன்புக்குரிய நண்பர்களை திருமணம் செய்ய வேண்டுமென்றால் இந்த 5 விஷயம் உங்களிடம் இருக்க வேண்டும்.

பொதுவாக சிலர் நண்பராக இருக்கும் வரை அவர்களின் எல்லையில் இருப்பார்கள்.

ஆனால், காதலராகவோ அல்லது கணவராகவோ ப்ரோமோஷன் கொடுக்கும்போது ஏதோ தங்களை கட்டுப்படுத்தும் லைசன்ஸை கையில் கொடுத்தாற்போல் நடந்துக் கொள்ள வேண்டியது.

இணையர் என்ன செய்ய வேண்டும் என்பதில் துவங்கி அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இவர்களின் முடிவுகளால் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டியது.

அது உங்கள் மீது நண்பராக இருந்தபோது இருந்த காதலை கூட அழித்து விடும். எனவே, அவர்களின் எல்லையில் அவர்களை இருக்கவிட்டு முழு நம்பிக்கையை அவர்கள் மீது வையுங்கள்.

பொறுப்புடன் இருங்கள்

பொதுவாக நம்மிடம் எவ்வளவு பெரிய காரணத்தை வைத்துக் கொண்டு ஒன்றுமில்லாதவராக பொறுப்பற்றவராக அலைந்து கொண்டிருந்தாலும் அது சரியில்ல.

அப்படியே நம்மிடம் நியாயமான காரணமே இருந்தாலும் அந்த சுமையை இன்னொருவர் மீது இறக்கி வைக்க முடியாது.

முடிந்தளவுக்கு உங்கள் பிரச்சனைகளுக்கு நீங்கள் பொறுப்பேற்று கொள்ளுங்கள். அதை விடுத்து “நண்பர் வருவார், வாழ்க்கை தருவார்’ என்று காத்துக் கொண்டிருக்காதீர்கள்.

அவர்களிடம் நீங்கள் உதவி கேட்கலாம். ஆனால், அவர்களையே உங்கள் பிரச்சனைகளுக்கு பொறுப்பாளி ஆக்கி விட்டால் சீக்கிரம் காதல் கசந்து விடும்.

என்னதான் பல நடைமுறை விஷயங்களை பேசினாலும், உணர்வுரீதியாக வரும்போது எதையும் கணிக்கமுடியாது. உதாரணமாக சில நேரங்களில் அவர்களுக்கு உங்களோடு நேரம் செலவழிக்க தோன்றும்.

சில நேரங்களில் தனிமையை விரும்புவார்கள். சில நேரங்களில் நண்பர்களோடு இருக்க விரும்புவார்கள். அந்த உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். நீங்களும் இதை பின்பற்றலாம்.

அதை விட்டுவிட்டு நீங்கள் 24 மணி நேரமும் அவர்களோடே செலவழித்து விட வேண்டும் என நினைத்துக் கொண்டு , சொந்த உலகத்தை இழந்து விட்டு அதை ஈடு செய்ய உங்களது பார்ட்னரையும் கட்டாயப்படுத்தாதீர்கள்.

அவர்களின் உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்த ஒரு ஸ்பேஸை உருவாக்கி கொடுங்கள். அதை உரையாடி புரிந்து நடந்துக் கொள்ளுங்கள்.

பொஸசிவ்

பொஸசிவ் என்பது மனித இயல்புதான். ஆனால், அது விளையாட்டாக முடிந்து விட்டால் பிரச்சனையில்லை. ஏதோ, உங்கள் காதலர் உங்களின் கைபொம்மை போலவும், யாராவது அதை தொட்டு விட்டால் அவரை அடிப்பது போலவும் நடந்து கொள்ள கூடாது. அவர் மனிதர் என்ற அறிவு நமக்குள் இருக்க வேண்டும்.

இயல்பாகவே மனிதர்கள் பலருடன் பேசுவார்கள், சிரிப்பார்கள், அந்தந்த நேரத்தில் தோன்றும் மனநிலைக்கு ஏற்றார் போல்தான் நடந்துக் கொள்வார்கள்.

அதற்கெல்லாம் பொஸசிவ் ஆகி சண்டை கட்டுவது, சாபமிடுவது, சளித்துக் கொள்வதெல்லாம் செய்யக் கூடாது.

அதே போல், நமது செயல்கள் பொது நியாயத்தின்படி பிறரை காயப்படுத்தாதவாறு இருக்க வேண்டும் என்பதை அனைவரும் புரிந்துக் கொள்வது அவசியம்.

ஒருவொருக்கொருவர் காதலித்து திருமணம்

யாரோ ஒருத்தர் படகு போல் மிதப்பார். அதில் ஏறி ஒருவர் சவாரி செய்யலாம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். படகு சீக்கிரம் மூழ்கி விடும். இருவரும் ஒருவொருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும்.

அவரவர் வேலைகளை அவர்களே செய்வதில் துவங்கி உடல்ரீதியாக, உணர்வுரீதியாக, பொருளாதார ரீதியாக ஒருவொருக்கொருவர் பரஸ்பரம் உதவி செய்துக் கொள்ள வேண்டும்.

இது மட்டும்தான் என்றில்லை. காதல் மனிதருக்கு மனிதர் புதிய புதிய அழகான முகங்களை காட்டும். அதை உங்களது வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையில்தான் கற்றுக் கொள்ள முடியும்.

எனவே, இந்த 5 அடிப்படை விஷயங்களை தெளிவாக மனதில் வைத்துக் கொண்டு உங்கள் சோபனாக்களை தேடுங்கள். வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.

Grow your business with digital marketing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version