உள்ளூர்
யாழில் மாணவி கொடுத்த சொக்லேட்டை வாங்கிய மாணவனுக்கு நேர்ந்த கதி!
யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவர் கொடுத்த சொக்லேட்டை வாங்கியதற்காக மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் பாடசாலையொன்றில் வைத்து மாணவி ஒருவர் கொடுத்த சொக்லேட்டை சக மாணவன் ஒருவன் வாங்கி உள்ளார்.
இதனால் மாணவியின் அண்ணனால் அம் மாணவன் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு தாக்கப்பட்ட நிலையில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இடம் பெற்ற தாக்குதல்
13 வயதான அம் மாணவி சில தினங்களுக்கு முன்னர் தனது வகுப்பு மாணவர்களுக்கு சொக்லேட் வழங்கியுள்ளார்.
அவர் 14 வயதுடைய தாக்குதலுக்கு உள்ளான மாணவனுக்கும் சொக்லேட் வழங்கியுள்ளார்.
இதையடுத்தே எதற்காக சொக்லேட்டை வாங்கினாய்? என்று வினவி மாணவியின் 17 வயதுடைய அண்ணன் அந்த மாணவன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
மாணவியின் அண்ணனின் தவறான புரிதலே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் பொலிஸார் முறைப்பாட்டை ஏற்க மறுத்தனர் என்றும் தொலைபேசி வழியாக பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாட்டைப் பதிவுசெய்ய முற்பட்டபோதே முறைப்பாட்டைப் பதிவு செய்தனர் என்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.