உலகம்

இலங்கையில் மறைந்து வாழும் பிரித்தானிய பெண்!

Published

on

13 மாதங்களாக இலங்கையில் சிக்கியுள்ள பிரித்தானிய பெண் கெல்லி பிரேசரை (35) (Kayyleigh Fraser) ஐக்கிய இராச்சியத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்ல பிரித்தானியா நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கெல்லி பிரேசரை பத்திரமாக பிரித்தானியாவிற்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கத்திடம் இருந்து சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளிடம் நாடாளுமன்ற உறுப்பினர் வெண்டி சேம்பர்லின் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அரகலய போராட்டம்

காலிமுகத்திடலில் நடந்த அரகலய போராட்டத்தின் போது இலங்கையில் தங்கியிருந்த பிரித்தானிய பிரஜையான கெய்லி பிரேசர் மீது குற்றம்சாட்டப்பட்டு , அவரது வீசாவை இலங்கை குடிவரவுத் திணைக்களம் ரத்து செய்தது.

அரசாங்கத்திற்கு எதிரான அரகலயபோராட்டத்திற்கு’ ஆதரவளித்த குற்றச்சாட்டின் காரணமாக, பிரச்சனைகளுக்கு உள்ளான அவர் தற்போது காணாமல் போயுள்ள நிலையில் அவர் குறித்த எந்த தகவலும் இல்லை.

இவ்வாறான நிலையிலேயே குறித்த பெண்ணை ஐக்கிய இராச்சியத்திற்கு அழைத்து செல்ல பிரிதானியா நடவடிக்கை எடுத்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version