உலகம்

பிரான்ஸில் பரபரப்பு: லொறிக்குள் சிக்கியிருந்த 6 பெண்கள் மீட்பு!

Published

on

பிரான்ஸில் லொறியின் பின்புறத்தில் இருந்து 6 பெண்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த லொறியில் 4 வியட்நாமியர்களும் 2 ஈராக்கியர்களும், புலம்பெயர்ந்தவர்கள் என்று கருதப்பட்டு, உள்ளே சிக்கி, பயத்தில் மூச்சுவிட சிரமப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் லொறியிக்குள் இருந்து பொலிஸாரிடம் பேசியுள்ளார்.

இதனையடுத்தே லொறியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் குறித்த பெண்களை மீட்டதுடன் லொறி சாரதியை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான மனித கடத்தல் நடவடிக்கை குறித்தும் அவர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version