உள்ளூர்
யாழில் பெரும் குடிமகன் அரங்கேற்றிய சம்பவம்!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை வடக்கில் ஒருவரின் காணிக்குள் இருந்த மாதா சொரூபம் மூன்றாவது தடவையாகவும் விசமிகளால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
நபர் ஒருவர் மதுபோதையில் அட்டகாசம் செய்வதாக மருதங்கேணி பொலிசாரிடம் காணி உரிமையாளர் ஒருவர் முறைப்பாடு பதிவு செய்ததிருந்தார்.
இதனை அறிந்த மதுபோதையில் இருந்த குறித்த நபர் நேற்று இரவு காணிக்குள் அத்துமீறி நுழைந்து அங்கே நிறுவப்பட்டிருந்த மாதா சொரூபத்தை அடித்து நொறுக்கியுள்ளார்.
அதேவேளை குறித்த நபர் குறித்த மாதா சொருபத்தை மூன்றாவது தடவையாக இவ்வாரு அடித்து நொறுக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.