உள்ளூர்

முல்லைத்தீவில் வரலாற்று சாதனை படைத்த குமுழமுனை மகாவித்தியாலய மாணவி.!

Published

on

முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை மகாவித்தியாலயம் தன் முதலாவது மருத்துவ மாணவியை கண்டு கொண்டது.2022 (2023) உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய மாணவி செழியன் தட்சாயினி மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்ள தகுதி பெற்றுள்ளார்.

வைத்திய விஞ்ஞானி என்ற உச்சம் தொட எண்ணியமையே தான் வைத்தியத்துறைக்கு தேர்வாக தூண்டியது என மாணவி தட்சாயினி தெரிவித்துள்ளார்.

குமுழமுனை மகாவித்தியாலயம் கடந்த 2015 ஆம் ஆண்டு 1AB தரப் பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது.

இதன் பின்னரே அந்த பாடசாலையில் உயர்தரம் உயிரியல் மற்றும் கணிதம் பாடப் பிரிவுகளுக்கான கற்றல் கற்பித்தல் அலகுகள் தொடங்கப்பட்டது.

அதுவரை காலமும் தமிழ் மற்றும் வணிகப் பிரிவுகளில் கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளும் வசதிகளே இருந்தன.

உயர்தர உயிரியல் பிரிவு ஆரம்பமானதால் குமுழமுனை பாடசாலையின் மாணவர்கள் உயர்தர உயிரியல் பிரிவில் கல்வியைத் தொடர வாய்ப்பெட்டியது.

இதன் பின்னரே அந்த பாடசாலையில் உயர்தரம் உயிரியல் மற்றும் கணிதம் பாடப் பிரிவுகளுக்கான கற்றல் கற்பித்தல் அலகுகள் தொடங்கப்பட்டது.

அதுவரை காலமும் தமிழ் மற்றும் வணிகப் பிரிவுகளில் கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளும் வசதிகளே இருந்தன.

இதேவேளை “சிறந்த வைத்தியராவதுடன் தன் தாய்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். தன்னையும் மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். வைத்திய விஞ்ஞானி என்ற உச்சத்தை தொட்டுவிட வேண்டும்” என குறிப்பிட்டார் மாணவி செ.தட்சாயினி.

மிகக் கடினமான போராட்டத்துடனேயே உயர்தர கற்பித்தலை எதிர்கொண்டு சாதனை படைத்த இந்த மாணவிக்கு நாழிகை குழுமமும் சார்பில் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version