உள்ளூர்
ரவூப் ஹக்கீம் கொடும்பாவி எரிக்கப்பட்டதால் பரபரப்பு! (Photos)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் சாய்ந்தமருது விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்களால் இன்று கொடும்பாவி எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பெருமளவானோர் திரண்டு பேரணி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நாளை சாய்ந்தமருதில் நடைபெறவிருக்கும் தலைவர் தின நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிலையில் அவரது வருகை தருவதை கண்டித்து இன்று சாய்ந்தமருதில் மாபெரும் கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியும் மக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த பேரணியில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டிருந்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களின் கொடும்பாவிகளை காலால் மிதித்து தீவைத்து எரிக்கப்பட்டன.
