உள்ளூர்

கிளிநொச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; களத்தில் படையினர்!

Published

on

கிளிநொச்சியில் கசிப்பு கும்பலை விரட்டிச் செனற பொலிஸ் அதிகாரி ஒருவர் காணாமல்போன சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரை தேடும் பணியில், பொலிஸாருடன் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சி மலையாளபுரம் புது ஐயங்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவலொன்று கிடைத்தது.

தீவிர தேடுதலில்  படையினர்

அந்த தகவலுக்கு அமைய நேற்றையதினம் (14 )அதிகாலை கிளிநொச்சி போலீஸ் நிலையத்திலிருந்த(03) போலீஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

இதன் பொழுது அங்கு சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர் .

இதனையடுத்து அவர்களை துரத்திச் சென்று பொலிஸார் மீண்டும் எட்டு முப்பது மணி அளவில் போலீசார் திரும்பி உள்ளனர் .

எனினும் மூவர் சந்தேக நபர்களை விரட்டிச்சென்ற போதும் இருவரே மீண்டு வந்த நிலையில் ஒரு பொலிஸார் மாயமாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ்ச் நிலைய பொறுப்பு அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய , பொலிசார் மற்றும் இராணுவத்தினர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் குளத்தின் கால்வாய் மற்றும் காடு போன்ற பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்  .

சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்

 நேற்று (14) மாலை வரை காணாத நிலையில் இன்று (15) 2 ஆம் நாளாக பணி முன்னெடுக்கப்ட்ட நிலையில் கிளிநொச்சி புதுஐயங்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சதுரங்க எனும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார். குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தார்.

சடலம் நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைகளை தொடர்ந்து உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version