உள்ளூர்
யாழில் பேருந்தில் இருந்து இறங்கியவர் திடீர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் நாவற்குழியில் பணியிடத்திற்கு செல்வதற்காக வருகை தந்தவர் பஸ்ஸில் இருந்து இறங்கிய போது மயங்கிய நிலையில் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் அருகில் உள்ள பனை தென்னை அபிவிருத்தி சபையில் பணி புரிபவர் என கூறப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.