உள்ளூர்

யாழ் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி; வெளியான புகைப்படம்

Published

on

யாழ், திருநெல்வேலியில் தனியார் விடுதியொன்றில் தனது பாட்டியுடன் தங்கியிருந்த 12 வயதான சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், உயிரிழந்த சிறுமியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலியில் தனியார் விடுதியொன்றில் நேற்று முன்தினம் (12) சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில் சிறுமியின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கவனித்துக்கொள்ள யாரும் இல்லாததால் , அவருக்கு நஞ்சூட்டிவிட்டு தானும் மரணிக்க முயன்றுள்ளதாக சிறுமியின் பாட்டி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அறையில் சிறுமியின் பாட்டியும் உணர்வற்ற நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில்,

கவனித்துக்கொள்ள யாரும் இல்லை

பாட்டியும், பேத்தியும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் கடந்த சில நாட்களாகக் குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளமையும் தெரியவந்தது.

அத்துடன் என்பதும், சிறுமி உயிரிழந்து 03 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாட்டியிடம் மேற்கொண்ட விசாரணையின் போது,

சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் அவரைக் கவனித்துக்கொள்ள யாரும் இல்லை என்ற காரணத்தினால், அவருக்கு நஞ்சூட்டிவிட்டு தானும் மரணிக்க முயன்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாட்டியைக் கைது செய்த பொலிஸார் அவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

53 வயதான ஓய்வு பெற்ற குடும்ப நல உத்தியோகத்தர் என்றும், சிறுமி திருகோணமலையில் தனது தந்தையுடன் வாழ்ந்து வந்த நிலையில், இருவரும், கடந்த 9ஆம் திகதி அந்த விடுதிக்கு வந்துள்ளனர்.

அங்கு சிறுமிக்கு உளச்சிக்கல்கள் உள்ளதாகவும்,அதற்கு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற வந்ததாகவும் கூறி விடுதியில் தங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பராமரிக்க யாருமில்லை என்பதற்காக  பாட்டியே சிறுமிக்கு விசம் கொடுத்து கொன்ற சம்பவம் பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version