உள்ளூர்
யாழ் வைத்தியசாலையில் பறிபோன சிறுமியின் கை; தாதி தொடர்பில் நீதிமன்றம் அதிரடி!
யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்ட தாதிக்கு யாழ். நீதவான் நீதிமன்று பயண தடை விதித்துள்ளது.
காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட “கானுலா” தவறாக பொருத்தப்பட்டதால், சிறுமியின் கை பாதிப்புக்கு உள்ளான நிலையில், சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் , அகற்றப்பட்டது.
தாதிக்கு பயணத்தடை
அது தொடர்பில் சுகாதார அமைச்சு, யாழ். போதனா வைத்திய சாலை, வடமாகாண ஆளூநர் ஆகியோரால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
அத்தோடு பாதிக்கப்பட்ட சிறுமியின் , பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தினர்.