உள்ளூர்
விரைவில் 8,000 ஆசிரியர்கள் நியமனம்
எதிர்காலத்தில் அரச பாடசாலைகளுக்கு 8 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
5500 பட்டதாரி ஆசிரியர்களும், இரண்டாம் மொழி ஆசிரியர்களாக 2500 ஆசிரியர்களும் உள்வாங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (23) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.