உள்ளூர்
வட்டி வீதங்கள் தொடர்பில் மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது வழமையான வட்டி விகிதங்களை மாற்றமில்லாமல் வைத்திருக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, துணைநில் வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் (SLFR) முறையே 11.00 சதவீதம் மற்றும் 12.00 சதவீதமாக காணப்படுகின்றன.
இதேவேளை, அடகு வசதிக்கான வருடாந்த அதிகபட்ச வட்டி வீத வரம்பான 18% ஐ விதிக்கவும் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது.
தற்காலிக மேலதிக பற்றுக்கு ஆண்டுக்கு 23 சதவீத வட்டி வரம்பு விதிக்கவும், கடனட்டை வசதிகளுக்கு ஆண்டுக்கு 28 சதவீத வட்டி வரம்பு விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.