உள்ளூர்
சிறைச்சாலையில் உயிர்க்கொல்லி பற்றீரியா புகுந்தது எப்படி?
காலி சிறைச்சாலையில் மெனிங்கோகோகல் பற்றீரியா பரவியதன் காரணமாக கைதிகள் உயிரிழந்து நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலி சிறைச்சாலையில் பரவி வரும் காய்ச்சல் காரணமாக இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 9 பேர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்த இரு கைதிகளின் பிரேதப் பரிசோதனைகள் நேற்று (21) நடத்தப்பட்டு வைத்தியர்கள் திறந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
இதன்படி, உடல் உறுப்புகள் மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க இரசாயன பரிசோதகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மெனிங்கோகோகல் பற்றீரியா கொடிய பற்றீரியா என்றும், போதைப்பொருள் பாவனையால் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களை இது பாதிக்கிறது என்றும் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.