உள்ளூர்

முன்பள்ளி முதல் அனைத்து மாணவர்களுக்கும் பாலியல் கல்வி; ரோகினி குமாரி

Published

on

முன்பள்ளி மாணவர்கள் முதல் 13ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாலியல் கல்வி வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாலுறவு அறிவை வழங்குவதற்காக தேசிய கல்வி நிறுவகத்தால் மாணவர்களுக்கான 14 புத்தகங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மருத்துவர்கள், குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சக அதிகாரிகள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஒவ்வொரு தரம் தொடர்பாகவும் தயாரிக்கப்பட்ட புத்தகங்களின் உள்ளடக்கங்கள் வகுப்பு ரீதியாக வேறுபடுகின்றன.

இந்தப் புத்தகங்கள் மேலதிக வாசிப்புப் புத்தகங்களாக வழங்கப்படுகின்றதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்ன நேற்று தெரிவித்தார்.

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு அடிப்படைக் காரணம் பாலியல் கல்வி தொடர்பான சமூகத்தின் போதிய அறிவின்மையே எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version