உள்ளூர்
பாடசாலையில் சக மாணவனை கொடூரமாக தாக்கிய மாணவன்! – தீவிர விசாரணையில் பொலீஸார்
காலியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவரொருவர் அதே பாடசாலையில் கல்வி கற்கும் சக மாணவனை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கரந்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை விளையாட்டு மைதானத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த தாக்குதலை 12ஆம் தரத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரே மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான 11ஆம் தரத்தைச் சேர்ந்த மாணவர் தற்போது எல்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Summary