உள்ளூர்

பச்சிளம் சிசுவிற்கு சிகிற்சை அளிக்க மறுப்பு; சர்ச்சையில் சிக்கிய வவுனியா வைத்தியசாலை!

Published

on

வவுனியா பொது வைத்தியசாலையில் பிறந்து 10 நாட்களான சிசுவுக்கு சிகிச்சையளிக்க முடியாது என தாதியர்கள் தெரிவித்த நிலையில், குறித்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 4ம்திகதி வவுனியா பொது வைத்தியசாலைக்கு மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு தாதியர் ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, தாய்க்கும் பிறந்து 10நாட்களேயானசிசுவிற்கு சிகிச்சையளிக்க மறுத்துள்ளனர்.

வைத்தியசாலையின் 7 ஆம் விடுதி குழந்தைகள் பிரிவில் உள்ள தாதியர்கள், தலைமை தாதியர் மற்றும் பயிற்சியில் உள்ள வைத்தியர் பெண்ணின் கணவருக்கு உங்கள் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

வலியால் துடித்த தாய்- கண்டுகொள்ளாத தாதியர்

உங்களால் சிகிச்சை அளிக்க முடியாது எனில் லாமா(Lama) முறை அடிப்படையில் அந்தப்பெண்ணின் கணவர் தம்மை விடுவிக்குமாறு கோரி விடுகைப்பத்திரத்தில் 12.08.2023 அன்று இரவு 10 மணியளவில் கையெழுத்து இட்ட பிற்பாடும் அடுத்த நாள் மாலை 3 மணிவரை சிகிச்சையும் அளிக்காமல் தாய் சேய் இருவரையும் விடுதியிலேயே வைத்துள்ளனர்.

இதனை வவுனியா வைத்தியசாலை பணிப்பாளரது கவனத்திற்கு கொண்டு சென்றும் அலட்சியப்போக்குடன் செயற்பட்டதாக கூறப்படுகின்றது

அத்துடன் தாதியர்கள் 13.08.2023 அன்று மதிய நேர தாய்க்குரிய மருந்து வில்லைகளையும் வழங்க மறுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version